வரலாற்றில் அபூர்வமாக நடக்கும் சம்பவம்! அமெரிக்காவில் ஒரே இரவில் ட்விஸ்ட்! தங்கம் விலையில் செம சேஞ்ச்
நியூயார்க்: அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் நேற்று பாசிட்டிவ்வாக வந்தபோதிலும், முதலீட்டாளர்கள் நீண்ட கால லாபத்தைக் கருதி தங்கத்தை அதிகளவில் வாங்கியதால், புதன்கிழமை தங்கம் விலை 1% மேல் அதிகரித்தது.
சர்வதேச சந்தையில் வர்த்தக முடிவில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1.25% உயர்ந்து 5,085.93 டாலராக விற்பனையானது. இந்திய மதிப்பில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

என்ன நடந்தது? (எளிமையான விளக்கம்)
பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால் (அதாவது அதிக பேருக்கு வேலை கிடைத்தால்), மக்கள் பணத்தை வங்கிகளில் முதலீடு செய்வார்கள் அல்லது டாலர் மதிப்பு உயரும். அப்போது தங்கம் விலை குறைய வேண்டும்.
ஆனால், தற்போதைய சூழலில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்திருந்தாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கிறார்கள். அதாவது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் நேற்று பாசிட்டிவ்வாக வந்தபோதிலும், முதலீட்டாளர்கள் நீண்ட கால லாபத்தைக் கருதி தங்கத்தை அதிகளவில் வாங்கியதால், புதன்கிழமை தங்கம் விலை 1% மேல் அதிகரித்தது.
உதாரணமாக: உங்களுக்கு ஒரு வேலை கிடைத்து சம்பளம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே சமயம் விலைவாசியும் உயர்கிறது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற பயமும் இருக்கிறது என்றால், நீங்கள் பணத்தை கையில் வைப்பதை விட 'தங்கமாக' மாற்றி வைப்பதே புத்திசாலித்தனம் என்று நினைப்பீர்கள் அல்லவா? பொதுவாக வேலைவாய்ப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். வேலைவாய்ப்பு அதிகரித்தால் தங்கள் விலை குறையும்.
ஆனால் இந்த முறை தலைகீழாக உலக அளவில் நடந்து வருகிறது. வேலைவாய்ப்பு நன்றாக இருந்தாலும் கூட எனோ மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள்.
இது பொதுவாக நடக்காத விஷயம். மிக அபூர்வமாக நடக்க கூடிய விஷயம். ஆனால் அமெரிக்காவில் இந்த முறை நடந்து உள்ளது. இதனால் தங்கம் விலை வேகமாக ஏற தொடங்கி உள்ளது.
வேலைவாய்ப்பிற்கு இடையே - தங்கம் விலை உயர முக்கிய காரணங்கள்:
மத்திய வங்கிகளின் ஆர்வம்: பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது இருப்பில் தங்கத்தை அதிகளவில் சேர்த்து வருகின்றன.
அரசியல் மாற்றங்கள்: அமெரிக்காவில் புதிய ஃபெடரல் ரிசர்வ் தலைவர் நியமனம் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள் தங்கத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
பொருளாதார மந்தநிலை பயம்: கடந்த டிசம்பர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால், பொருளாதாரம் மெதுவாகவே வளரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மற்ற உலோகங்களின் நிலை:
தங்கத்தைப் போலவே மற்ற விலை உயர்ந்த உலோகங்களின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்தது:
வெள்ளி: 4.6% உயர்ந்து ஒரு அவுன்ஸ் 84.43 டாலராக விற்பனையானது. எதிர்பார்த்ததை விட அதிகமாக வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
பிளாட்டினம்: 2.8% விலை அதிகரித்தது. எதிர்பார்த்ததை விட அதிகமாக பிளாட்டினம் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை - அடுத்து என்ன?
முதலீட்டாளர்கள் அனைவரும் இப்போது வெள்ளிக்கிழமை வரப்போகும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) தகவலுக்காகக் காத்திருக்கின்றனர். இதில் விலைவாசி உயர்வு குறித்த தரவுகள் வெளியானால், தங்கம் விலை மேலும் மாற்றத்தைச் சந்திக்கலாம்.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications