Gold Rate Today: இன்ப அதிர்ச்சி! அதிரடியாக சரிந்த தங்கம் விலை! நகை வாங்குற பிளான் இருந்தா உடனே போங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,640 குறைந்துள்ளது. நேற்று அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறையும் போது பெயரளவில் குறைந்துவிட்டு, அதிகரிக்கும் போது ஜெட் வேகத்தில் அதிகரிக்கிறது. இதனால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

gold-today-rate-may-01-yellow-metal-falls-big-check-today-rate-in-chennai

உச்சத்தில் தங்கம் விலை

நம் நாட்டை பொறுத்த வரையில், ஆண்கள் பெண்கள் என பலரும் தங்க நகைகள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர். முதலீடுகளுக்காக மட்டுமின்றி ஆபரணங்களாகவும் அணிகிறார்கள். இதனால் தங்கம் விலை உயர்வு நேரடியாக மக்களை பாதிக்கிறது. சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் விலை உயர்வு பேரிடியாக அமைந்து வருகிறது. இதனால் இனி கனவில் தான் நகைகள் வாங்க முடியுமோ என அச்சமடைந்துள்ளனர்.

ஒரு சவரன் ரூ. 60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ என்ற காலம் போய் எங்கு 80 ஆயிரத்தை தொட்டு விடுமோ என நினைக்கும் அளவுக்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 9 ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை கடந்த மாதம் 12 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை தாண்டியது.

இன்றைய விலை என்ன?

அதன் பிறகு ரூ.2 ஆயிரம் அளவில் அதிகரித்த தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டிவிட்டு மீண்டும் சற்று குறைந்தது. இந்த நிலையில் நேற்று ரூ. 71,840க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று சவரனுக்கு ரூ.1640 குறைந்துள்ளது.

இதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.70,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,980க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.205 குறைந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ரூ.8,775க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 2 குறைந்து இன்று ரூ.109க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாத தங்கம் விலை நிலவரம்:

30.04.2025 - ஒரு சவரன் ரூ. 71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ. 71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ. 71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ. 72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ. 72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ. 72,040
24.04.2025 - ஒரு சவரன் ரூ. 72,040
23.04.2025 - ஒரு சவரன் ரூ. 72,120
22.04.2025 - ஒரு சவரன் ரூ. 74,320
21.04.2025 - ஒரு சவரன் ரூ. 72,120
20.04.2025 - ஒரு சவரன் ரூ. 71,560

16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (ஒரேநாளில் இரண்டு முறை உயர்வு)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+