வருகிறது புதிய மாடல் தங்கம்.. இனி 9 காரட் தங்கத்திற்கும் ஹால்மார்க் போட உத்தரவு.. நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 9 காரட் தங்கம் கட்டாய ஹால்மார்க்கிங் வரம்பிற்குள் கொண்டுவரப்படும். இந்த விதிமுறை ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 14 காரட், 18 காரட், 20 காரட், 22 காரட், 23 காரட் மற்றும் 24 காரட் தங்க நகைகள் மட்டுமே கட்டாய ஹால்மார்க்கிங் முறையில் இருந்தன. நுகர்வோர் தாங்கள் வாங்கும் நகைகளின் தூய்மையை அறிந்து கொள்ளும் வகையில், ஹால்மார்க்கிங் முறை BIS சட்டம் 2016-ன் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

gold rate silver investment

இதுகுறித்து அகில இந்திய ஜெம் மற்றும் ஜுவல்லரி உள்நாட்டு கவுன்சில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "BIS விதிகளின் கீழ் 9 காரட் தங்கம் கட்டாய ஹால்மார்க்கிங் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து நகைக்கடைக்காரர்களும், ஹால்மார்க்கிங் மையங்களும் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

தங்க ஹால்மார்க்கிங்

மேலும் அந்த கவுன்சில் கூறுகையில், "BIS திருத்த எண் 2-ன் படி, 9 காரட் தங்கம் (375 ppt) அதிகாரப்பூர்வமாக கட்டாய ஹால்மார்க்கிங் வரம்பிற்குள் வந்துள்ளது. எனவே அனைத்து நகைக்கடைக்காரர்களும், ஹால்மார்க்கிங் மையங்களும் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், 9 காரட் தங்க நகைகளை வாங்குவதில் நுகர்வோரின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வகை தங்கத்தில் நகைகளை வடிவமைப்பதும் எளிதாக உள்ளது.

தங்க ஹால்மார்க்கிங் என்பது தங்க நகைகளின் தூய்மையை உறுதி செய்யும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் ஆகும். இது BIS சட்டம் 2016-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளில் ஆறு இலக்க தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு (HUID) பொறிக்கப்பட்டிருக்கும். இது நகையை கண்டுபிடிப்பதற்கும், நுகர்வோர் பாதுகாப்பிற்கும் வழிவகை செய்கிறது. இதுவரை 40 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் தனித்துவமான HUID உடன் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளன. இது சந்தையில் நுகர்வோரின் நம்பிக்கையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கிறது.

எந்த தங்கம் வாங்குவது பெஸ்ட்?

இதில் 22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

நீங்கள் வீட்டில் தங்கத்தை ஒரு வரம்பு வரை சேமித்து வைத்தால், யாரும் உங்கள் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவே உங்கள் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.

திருமணமாகாத பெண்கள் - திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமாகாத ஆண்கள்- திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.

திருமணமான பெண்கள்- திருமணமான பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும். திருமணமான ஆண்கள் - அதேசமயம் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.

அதுவே பெண்கள் 500 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் ஆண்கள் 250 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் வீட்டில் இந்த குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.

காரட் தங்கம்

காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.

24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.

இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.

வருகிறது புதிய தங்கம்

தங்கத்தின் விலை 2024ல் 25% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2024ல் தங்கத்தின் விலை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.

இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். அதேபோல் இந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்கப்பட உள்ளது. 2கே கிட்ஸ் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால்.. அவர்கள் எளிதில் தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 9 கேரட் தங்கத்திற்கு ஹால் மார்க் முத்திரையுடன் அனுமதி அளிக்க உள்ளனர்.

2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+