டிரம்ப் தலையால் அடிச்சிக்கிட்டாரே.. சீட்டு கட்டு போல மளமளவென சரிந்த தங்கம் விலை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த சம்பவம் ஒன்றால், உலக அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மத்திய வங்கி.. அதாவது இந்தியாவின் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்பிடம் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து உள்ளார் டொனால்ட் டிரம்ப்.

donald trump gold rate

மத்திய வங்கி மீது போர் தொடுக்க தயாராக இருப்பதாக அவர் வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளாராம். அவர் விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உடனே வரியை குறைக்க வேண்டும். வரி மதிப்பை (நம் நாட்டின் ரெப்போ ரேட் போல) உடனே குறைக்க வேண்டும். இல்லையென்றால் அவரை நீக்க வேண்டி இருக்கும்.

அந்த மத்திய வங்கி வேண்டும் என்றால் சுதந்திரமான அமைப்பாக இருக்கலாம். ஆனால் நான் நினைத்தால் அவரை நீக்க முடியும். அவரை நீக்கி விட்டு வரியை குறைக்க சொல்ல முடியும். அடுத்த சில வாரங்களுக்குள் வரியை குறைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை அந்த வங்கி சந்திக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

இதற்கு பவல் அளித்த பதிலில், நாங்கள் வரி குறைப்பை பல ஆலோசனைக்கு பின்பே எடுப்போம். டிரம்ப் சொல்கிறார் என்பதால் செய்ய முடியாது. அதோடு 2026 மே வரை என் பதவிக்காலம் இருக்கிறது. அதற்கு முன் நான் ராஜினாமா செய்யும் திட்டத்தில் இல்லை என்று கூறி உள்ளார் .

ஆனால் அதிபர் டிரம்ப் சொல்வதை கேட்டு அமெரிக்காவில் வரி விகிதம் குறைக்கப்படும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த காலாண்டில் வரி விகிதம் குறைக்கப்பட்டது என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது.

வர்த்தகப் போர், நாட்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையற்ற பணவீக்கப் போக்குகள் ஆகியவற்றால் வரி விகிதத்தை குறைக்க மாட்டோம் என்று அந்நாட்டு பெடரல் வங்கி அறிவித்துள்ளது. அந்நாட்டு வட்டி விகிதங்களை 4.25% முதல் 4.5% வரை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

மளமளவென சரிந்த தங்கம் விலை

வட்டி விகிதம் பொதுவாக குறைந்தால் டாலர் மதிப்பு சரியும். டாலர் மதிப்பு சரிந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கள் விலை உயரும். ஆனால் இங்கே அப்படியே எதிர்மறையாக நடந்துள்ளது. வட்டி விகிதம் பொதுவாக குறைக்கப்படாமல் போனால் டாலர் மதிப்பு உயரும் . டாலர் மதிப்பு உயர்ந்தால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய மாட்டார்கள். இதனால் தங்கள் விலை சரியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,687 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,879 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,319 ஆகவும் உள்ளது.

தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 2500 ரூபாய்க்கு மேல் குறைந்து உள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,119.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3179 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.

1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3179 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 23,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+