தங்கத்தை அடகு வைக்க போறீங்களா? 1 கிராம் வைத்தால் எவ்வளவு கிடைக்கும்? விதிகளை மாற்றிய ஆர்பிஐ
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக தங்க கடன் வழங்குவது தொடர்பான புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதனால் தங்க லோன் வழங்குவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
நாட்டில் உள்ள பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன்களை வழங்குகின்றன. தங்கக் கடனின் கீழ் கிடைக்கும் கடன் தொகை உங்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் அளவைப் பொறுத்தது.
பொதுவாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் தங்கத்தின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக வழங்குகின்றன. ஆர்பிஐ புதிய விதிகளின்படி அதிகபட்சம் 75% தான் கடன் வழங்கப்படும். உதாரணமாக, உங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,00,000 எனில், ரூ.75,000 வரை தங்கக் கடன் பெறலாம். தங்கக் கடனுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள் 8 சதவீதத்தில் இருந்து தொடங்கி 24 சதவீதம் வரை செல்லலாம். இது தவிர, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் தங்கக் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கின்றன.
உங்களிடம் 5 கிராம் 24 காரட் தங்கம் இருந்தால், ரூ.30,350 வரை கடன் பெறலாம். அதேபோல், 5 கிராம் 22 கேரட் தங்கம் இருந்தால், ரூ.27,820 வரை கடன் பெறலாம். 5 கிராம் 20 காரட் தங்கம் இருந்தால் ரூ.25,290 வரையிலும், 5 கிராம் 18 காரட் தங்கம் இருந்தால் ரூ.22,760 வரையிலும் கடன் பெறலாம். 5 கிராம் தங்கத்தின் தூய்மையை பொறுத்து இந்தக் கடன் தொகை சற்று மாறுபடலாம் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.

தங்க கடன் மாற்றம்
வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும். தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோ விற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.
இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் பட்சத்தில் வங்கிகள் அல்ல.. நகை அடகு கடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது இவர்கள் நகைகளை பராமரிக்க முடியாமல் போகலாம். இனி நகைகளை அடகிற்கு எடுக்க முடியாமல் போகலாம். இன்னும் சில நகை அடகு கடைகள் இந்த விதிகள் காரணமாக மொத்தமாக மூடப்படும் நிலை கூட ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications