Gold Rate Today: அடிக்குது ஜாக்பாட்.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. காலையில் மட்டும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ள நிலையில், இன்று மாலை மேலும் ரூ.1,040 குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.2,360 குறைந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையானது குறையுமா அல்லது சட்டென உயர்ந்து அதிர்ச்சி கொடுக்குமா? என நகை பிரியர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து அனைவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

gold price Chennai gold

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே ஜெட் வேகத்தில் தங்கம் விலை ஏறத்தொடங்கியது. இடையில் இடையில் சற்று குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே வந்தது. இந்த ஆண்டின் முதல் நாளில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.57,200 ஆக இருந்தது.


74 ஆயிரம் சென்ற தங்கம் விலை

ஆனால் ஒரே மாதத்தில் தங்கம் விலை 10 ஆயிரம் உயரந்தது. அதாவது பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு ஏப்ரல் மாத்ததில் ஒரு சவரன் 68,080 ரூபாயாக உயர்ந்தது. மே 1 ஆம் தேதி சவரன் 70,200 ஆக இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலையானது புதிய புதிய உச்சங்களை தொட்டு நகை பிரியர்களையும் இல்லத்தரசிகளையும் கலங்க வைத்தது. அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்தது.

ஒரு சவரன் விலை ரூ.74,320-க்கு விற்பனை ஆனது. பின்னர் சற்று குறைந்தது. இப்படியாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதும் சில நாட்களில் குறைவதும் என நகை பிரியர்களை திணறடித்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு உள்ளிட்டவைகளால் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதி தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதிரடியாக குறைந்த விலை

இதனால் தங்கம் விலையானது கடுமையான உயர்வை சந்தித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள். தங்கம் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,360-க்கு விற்பனையானது., கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,045-க்கும் விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் விலையானது இன்று குறையுமா அல்லது சட்டென உயர்ந்து அதிர்ச்சி கொடுக்குமா? என நகை பிரியர்கள் ஆர்வத்துடன் இன்றைய விலை நிலவரத்தை எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் நகைப் பிரியர்களுக்கு இனிப்பான செய்தியாக, தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.

இன்றைய ரேட் என்ன?

இதனால் நேற்று ஒரு சவரன் ரூ.72,360க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.1320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிராமுக்கு ரூ.165 குறைந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.8,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் விலை ஒரு கிராம் மீண்டும் 9 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது. இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.109க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது இன்று காலையில் சவரனுக்கு ரூ.1320 குறைந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 1040 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,000 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் சென்னையில் இன்று ரூ.8,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கடும் விலை சரிவையடுத்து சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்:

12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000 (மாலை)

12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040 (காலை)
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025 - ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 - ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025 - ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025 - ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+