பல ஆயிரம் சேமிக்கலாம்! ஆன்லைனில் தங்கம் வாங்குறீங்களா? இந்த 10 விஷயத்தை மறக்காதீங்க! ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,791 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,975 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,434 ஆகவும் உள்ளது.

இந்த நிலையில் மக்கள் பலரும் ஆன்லைனில் தங்கம் வாங்க தொடங்கி உள்ளனர். அதிலும் இன்று அட்சய திருதியை என்பதால் இன்றும் பலர் ஆன்லைனில் தங்கம் வாங்கும் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதிலும் தற்போதெல்லாம் ஒரே நாள் டெலிவரியில் உணவு டெலிவரி நிறுவனங்கள் கூட நேரடியாக தங்கத்தை விற்கின்றன.

இந்த நிலையில்தான் ஆன்லைனில் தங்கம் வாங்கும் மக்கள் எதை எல்லாம் கவனிக்க வேண்டும்.. எப்படி தங்கம் வாங்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.

1. ஹால்மார்க்

இந்தியாவில் உள்ள BIS (இந்திய தரநிலைகள் பணியகம்) போன்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்பால் நீங்கள் வாங்கும் தங்கம் சான்றளிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்தும் BIS ஹால்மார்க்க் இருக்கிறதா என்று தேடுங்கள்

2. ஹால்மார்க்கில் சிறந்தது எது?

22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக நீங்கள் தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.

How to buy gold online What are the things you should note while buying

3. காரட் தங்கம்

காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.

24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.

இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும்.

4. நற்பெயர் பெற்ற வலைத்தளங்கள் அல்லது பிராண்டுகளிலிருந்து மட்டுமே தங்கத்தை வாங்கவும். அவை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டவையா அல்லது நம்பகமான நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும்.

5. தங்கத்தின் விலையை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிடுக. தங்கத்தின் மதிப்பு, செய்கூலிகள், வரிகள் உள்ளதா என்பதை பார்க்கவும். தங்கத்திற்கு ஆன்லைனில் அதிக ஆபர் வழங்கப்படுவதால் பல ஆயிரங்களை இதில் சேமிக்கலாம்.

6. உங்கள் மெயிலில் முறையாக பில் அனுப்பும் நிறுவனங்களில் மட்டும் வாங்கவும்.

7. செய்கூலி பெரும்பாலும் ஆன்லைனில் இருக்காது. அது இல்லாமல் இருக்கும் நிறுவனங்களில் வாங்கவும்.

8. தங்கம் திரும்பப் பெறுதல் அதாவது ரிட்டர்ன், பரிமாற்றம் மற்றும் விற்பனை போன்றவற்றிற்கான கொள்கைகள் எப்படி உள்ளன என்று பார்க்கவும். அதாவது தங்கம் டேமேஜ் ஆகி இருந்தால் அதை உடனே பரிமாற்றம் செய்ய எப்படிப்பட்ட வசதிகள் உள்ளன என்று பார்க்கவும்.

9. நீங்கள் வாங்கும் தங்கத்தின் எடை உள்ளிட்ட விவரங்கள் முறையாக பில்லில் உள்ளதா என்று பார்க்கவும்.

10. கஸ்டமர் ரிவ்யூ குறித்தும் சோதனைகள் செய்யவும். அதேபோல் உங்களின் தங்கம் உங்கள் கைகளை சேரும் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறதா என்பதை பார்க்கவும். முறையான ஜிஎஸ்டி பில் இருக்கிறதா என்றும் சோதனை செய்யவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+