Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன் மாதிரி நிற்கும் தங்கம்.. ஒரு வருஷத்துக்கு ஒன்னுமே பண்ண முடியாது! விலை குறைய வாய்ப்பேயில்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தங்க விலை வரவிருக்கும் மாதங்களில் மேலும் உயரும் என்று ICICI வங்கி குளோபல் மார்கெட்ஸ் வெளியிட்ட புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய தங்க விலை உயர்வும், இந்திய ரூபாய் மதிப்பு குறைவதும் இதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு (Q4 2025) முதல் 2026ஆம் ஆண்டின் முதல் பாதி வரை, டாலர்-ரூபாய் மதிப்பு ₹87 முதல் ₹89 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு இவ்வாறு பலவீனமடைந்தால், அதனுடன் தங்க விலையும் மேல்நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டின் மீதிக் காலத்தில், இந்தியாவில் தங்க விலை ஒரு பத்து கிராம் தங்கத்திற்கு ரூ.1,20,000 முதல் ரூ.1,35,000 வரை விலையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில், அது ரூ.1,30,000 முதல் ரூ.1,45,000 வரை உயரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

gold price gold ICICI

தங்க விலை

தற்போது இந்திய சந்தையில் எம்.சி.எக்ஸ் (MCX) தளத்தில் ஒரு பத்து கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.1.31 லட்சம் அளவில் உள்ளது. இதனால், வரவிருக்கும் மாதங்களில் தங்கம் புதிய உச்சத்தைக் காணும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆல் இந்தியா ஜெம் அண்ட் ஜுவல்லரி டொமெஸ்டிக் கவுன்சில் முன்னாள் தலைவர் அனந்த பத்மநாபன் அளித்த பேட்டியில், "உலக சந்தையும் உள்நாட்டு சந்தையும் மிகுந்த வேகத்தில் வளர்கின்றன. மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கம் வாங்கி வருகின்றன. சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மக்களின் தங்க தேவை பெருகியதால், வரவிருக்கும் மாதங்களில் தங்க விலை ரூ.1.50 லட்சம் வரை உயரக்கூடும்," என்று தெரிவித்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கி

ICICI வங்கி குளோபல் மார்கெட்ஸ் அறிக்கையில் மேலும், தங்கத்திற்கான மூலதன முதலீட்டு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. SPDR தங்க ETF-இல், 2025 செப்டம்பர் 13 நிலவரப்படி 975 டன் இருந்தது, அதே ஆண்டு அக்டோபர் 13-க்குள் 1015 டன் என உயர்ந்துள்ளது. இது தங்கத்தில் முதலீட்டு நம்பிக்கை அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. அதேவேளை, தங்கத்தில் speculative net long positions (முன்கூட்டியே விலை ஏற்றம் எதிர்பார்த்து வைக்கப்பட்ட முதலீடுகள்) கடந்த மாதத்தில் சுமார் 8,000 அளவில் குறைந்துள்ளன.

ரூபாய் மதிப்பு

அறிக்கையின் படி, கடந்த மாதத்தில் மட்டும் தங்க விலை 16 சதவீதம் உயர்ந்துள்ளது. இது உலகளாவிய தங்க விலை உயர்வும், ரூபாய் மதிப்பு குறைவும் சேர்ந்து ஏற்பட்ட விளைவாகும். இதனுடன், தங்க இறக்குமதி ஆகஸ்டில் USD 5.44 பில்லியனில் இருந்து செப்டம்பரில் USD 9.6 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது உள்நாட்டு தேவை இன்னும் வலுவாக உள்ளதைக் காட்டுகிறது. இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், தங்கத் தேவை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க விலை உயர்வு

பாரம்பரியமாக இந்திய குடும்பங்கள் நகை, நாணயம், தங்க கட்டி ஆகியவற்றில் தங்கத்தை வாங்கும் பழக்கம் கொண்டாலும், தற்போதைய விலை உயர்வின் காரணமாக நகர்ப்புற முதலீட்டாளர்கள் தங்க ETF-களை அதிகம் விரும்புகின்றனர். உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) அறிக்கையின்படி, 2025 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்க ETF-களில் வரலாற்றிலேயே அதிக முதலீட்டு நுழைவு (inflow) பதிவாகியுள்ளது. பங்கு சந்தை பலவீனம் மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதுகின்றனர். அதனால் தங்கத்தின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் உயர்வது உறுதி என சந்தை வல்லுநர்கல் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+