எச்சரித்த ஜே பி மோர்கன்.. சர்வதேச மார்க்கெட்டில் தாறுமாறாக மாறிய தங்கம் விலை.. கதறும் மார்க்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச மார்க்கெட்டில் தங்கத்தின் விலை தாறுமாறாக மாறிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் கடந்த வாரம் முழுக்கவே தங்கத்தின் விலை சரிந்து வந்தது. ஆனால் வாரத்தின் முதல் நாளான இன்று அமெரிக்க மார்க்கெட்டில் தங்கம் விலை உயர்ந்து உள்ளது.

gold rate Bitcoin

1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 24 டாலர்கள் உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,223.54 டாலராக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று (இந்திய நேரப்படி நேற்று இரவு) தங்கத்தின் விலை 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. MCX தங்கம் 2.14 சதவீதம் உயர்ந்து 1 அவுன்ஸுக்கு கிராமுக்கு ₹2,75,624 ஆக வர்த்தகம் செய்யப்பட்டன. இதனால் சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,512 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,719 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,184 ஆகவும் உள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் என்பது கிட்டத்தட்ட 28 கிராம் ஆகும்.

ஜே பி மோர்கன் எச்சரிக்கை

ஆனால் தங்கத்தின் விலை பாதுகாப்பானதாக இல்லை என்று பிரபல ஜே பி மோர்கன் நிறுவனம் எச்சரித்து உள்ளது. ஜே.பி. மோர்கன் 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க மந்தநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனமாக மாறியுள்ளது. அமெரிக்க மார்க்கெட் தினம் தினம் சரியும் நிலையில்.. உலக பொருளாதாரம் அழிய போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தங்கம் கூட பாதுகாப்பு இல்லை. பிட்காயின் மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஜே பி மோர்கன் நிறுவனம் கூறி உள்ளது. இப்படி தங்கம் விலை சரியும் என்று பலரும் கணித்து வருகின்றனர். ஆனால் தங்கத்தின் விலை சரியாது கண்டிப்பாக உயரும் என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.

அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.

என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.

முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்து இருந்தார்.

உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+