4000 டாலரை தொடப்போகிறது.. அது மட்டும் நடந்தால் எல்லாமே மாறும்.. தங்கம் விலை.. ஜே பி மோர்கன் கணிப்பு
சென்னை: ஜேபி மோர்கன் நிறுவனம் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு $4,000 வரை உயரும் என்று கணித்துள்ளனர்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில், 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தங்கத்தின் விலை சராசரியாக அவுன்ஸ் ஒன்றுக்கு $3,675 ஆகவும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $4,000/அவுன்ஸ் அளவைத் தாண்டும் என்றும் கணித்துள்ளார். இப்போது தங்கம் விலை அவ்வப்போது சரிவது போல தோன்றலாம்.

ஒரு சில வாரங்கள் வேகமாக சரிவை சந்திக்கலாம். ஆனால் கண்டிப்பாக தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 4 ஆயிரம் டாலர் வரை செல்லும். நாம் நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை தங்கம் அடைய போகிறது என்று ஜேபி மோர்கன் நிறுவனம் தங்கத்தின் விலை குறித்து கணித்துள்ளது.
1 அவுன்ஸ் தங்கம் என்பது = 31.1035 கிராம் ஆகும்.
எனவே 1 கிராம் தங்கம் அமெரிக்க டாலரில் 4000/ 31.1035 = 128.56 டாலர்கள் ஆகும்.
இப்போதைக்கு $1 = ₹83.5 ரூபாய் ஆகும்.
எனவே இந்திய ரூபாயில் 1 கிராம் தங்கத்தின் மதிப்பு 128.56 × 83.5 = ₹ 10,729 ஆகும்.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹9,792 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹8,976 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,396 ஆகவும் உள்ளது. இது 1000 ரூபாய் வரை கிராம் ஒன்றிற்கு உயரும் என்று ஜேபி மோர்கன் நிறுவனம் கணித்துள்ளது.
அமெரிக்காவில் நேற்று (இந்திய நேரப்படி நேற்று இரவு) தங்கத்தின் விலை 2 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. MCX தங்கம் 2.14 சதவீதம் உயர்ந்து 1 அவுன்ஸுக்கு கிராமுக்கு ₹2,75,624 ஆக வர்த்தகம் செய்யப்பட்டன. இதனால் சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹9,512 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹8,719 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹7,184 ஆகவும் உள்ளது. 1 அவுன்ஸ் தங்கம் என்பது கிட்டத்தட்ட 31 கிராம் ஆகும்.
பலரும் கணிப்பு
அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.
என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.
முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்து இருந்தார்.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி












Click it and Unblock the Notifications