Gold Rate Today: தங்கத்தில் ஒரே வாரத்தில் நடந்த சூப்பர் மாற்றத்தை கவனித்தீர்களா? இன்று தங்கம் விலை பாருங்க, நல்லவேளை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 குறைந்திருந்தது. ஆனால் நேற்று தங்கம் சட்டென உயர்ந்து 70 ஆயிரத்தை கடந்தது. ஆனால் நேற்று மாலையே தங்கம் விலை சற்று குறைந்து 69,760க்கு மாறியது. தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. நேற்று விலையே இன்று தொடர்கிறது.

தங்கம் விலை கடந்த ஒரு மாதமாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை ஆனது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக அந்த விலை பார்க்கப்பட்டது. ஆனால்அதன் பின்னர் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. இதனால் ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் போனது. அதனைத் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமாகவே இருந்தது.

gold rate gold

அதேநேரம் திடீர் திடீரென தங்கம் விலை அதிகரித்தபடியே தான் இருந்தது. இதனால் மீண்டும் ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்தையும், ரூ.73 ஆயிரத்தையும் தாண்டியது. ஆனால் கடந்த ஏப்ரபல் 12-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360 அதிரடியாக சரிந்து, ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. மறுநாள் விலை அதிகரித்து காணப்பட்டாலும், கடைசியயான நான்கு நாட்களில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது
அதன்படி, கடந்த 15ம் தேதி அன்று ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 805-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.195-ம், பவுனுக்கு ரூ.1,560-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 610-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 880-க்கும் விற்பனையனாது.

இதற்கு முன்பு கடந்த மாதம் 10-ந்தேதி வரை ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் இருந்தது. அந்தவகையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது. கடந்த ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.4,160 குறைந்திருந்தது. ஆனால் நேற்று காலை தங்கம் விலை சட்டென உயர்ந்து 70 ஆயிரத்தை கடந்தது. ஆனால் நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை சற்று சரிந்து 70 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

மே 16ம் தேதியான நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை ஒரு கிராம் 8,720க்கும், ஒரு சவரன் தங்கம் 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று தங்கம் விலை உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தங்கம் விலை அமெரிக்க சந்தையில் நேற்று சற்று குறைந்திருந்தது. எனவே இன்று இந்தியாவிலும் தங்கம் விலை சற்று குறையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் மே 17ம் தேதியான இன்று தங்கம் விலை ஒரு கிராம் 8,720க்கும், ஒரு சவரன் தங்கம் 69,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து குறைவதற்கு காரணமாக சில விஷயங்களை வியாபாரிகள் கூறுகிறார்கள். அமெரிக்கா சீனா இடையே வார்த்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உள்ள ஆர்வம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றச்சூழல் தற்போது தணிந்து இருப்பது போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை தவிர்த்து, பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்ய தொடங்கியிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+