பெரிய சம்பவம் நடக்க போகுது? அடுத்த வாரத்திற்குள்.. தங்கம் வாங்குறவங்க வாங்கிக்கோங்க.. இதுதான் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை அடுத்த வாரம் அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா - அமெரிக்காவின் வர்த்தக போர் உச்சம் அடைந்த நிலையில் அது அடுத்த வாரம் மார்க்கெட்டில் எதிரொலிக்கும்.

இன்று ஆரம்ப வர்த்தகத்தில் 24 காரட் தங்கத்தின் விலை ₹10 உயர்ந்தது. மேலும் பத்து கிராம் தங்கத்தின் விலை ₹96,180 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் ₹100 உயர்ந்து, ஒரு வெள்ளி ₹1,00,100க்கு விற்பனையானது. 22 காரட் தங்கத்தின் விலை ₹10 உயர்ந்து, பத்து கிராம் தங்கம் ₹88,160க்கு விற்பனையானது. மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் பத்து கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ₹96,180 ஆக உள்ளது. டெல்லியில் பத்து கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ₹96,330 ஆக உள்ளது.

அமெரிக்காவில் தங்கத்தின் விலை

வர்த்தக போர் காரணமாக ஏற்பட்ட டாலரின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 3% உயர்ந்து தங்கம் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சம் அடைந்து வருகிறது.

Next week will be crucial for the Gold rate as it may cross a new level

ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3245ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3242ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.75 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது. தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினால் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த வாரம் விலை என்ன?

தங்கத்தின் விலை அடுத்த வாரம் அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா - அமெரிக்காவின் வர்த்தக போர் உச்சம் அடைந்த நிலையில் அது அடுத்த வாரம் மார்க்கெட்டில் எதிரொலிக்கும். ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு $3300 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது மூன்றரை பவுன் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 2.78 லட்சம் ரூபாய் ஆகும்.

கிட்டத்தட்ட அடுத்த வாரம் மட்டும் 1000-2000 வரை மூன்றரை பவுன் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சம் அடைந்து உள்ளது. சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வரிகளை உயர்த்தி வருகிறார் . உலகம் முழுக்க உள்ள நாடுகள் மீது டிரம்ப் உயர்த்திய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.

தங்கம் விலை ஏன் உயரும்?

தற்போது வர்த்தக போரின் நிலவரப்படி அமெரிக்கப் பொருட்கள் மீதான சீனாவின் 34% வரிக்குப் பதிலடியாக சீன ஏற்றுமதிகளுக்கு 104% வரியை அமெரிக்கா அறிவித்தது. ​ அமெரிக்கா உலகம் முழுக்க பல நாடுகளுக்கு 10% முதல் 50% வரையிலான வரிகளை விதிக்கிறது. சீனப் பொருட்களுக்கு 34% + 104% வரி விதிக்கப்படுகிறது. ஏப்ரல் 10, 2025 முதல் அமெரிக்கப் பொருட்களுக்கு 34% சீனா வரியை விதிக்கிறது. சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத காரணத்தால் சீனப் பொருட்களின் மீதான வரியை 104% ஆக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

இப்போது சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டது. இதனால் அடுத்த வாரம் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 2000க்கும் மேல் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+