தங்க நகைகள் வாங்கினால்.. பெரிய அளவில் இழப்பை சந்திப்பீர்கள்.. கடுமையாக எச்சரிக்கும்.. பிரபல வங்கி
டெல்லி: கோட்டக் இன்ஸ்டிட்யூஷனல் ஈக்விட்டிஸ் (KIE) நிர்வாக இயக்குநர் மற்றும் இணைத் தலைவரான சஞ்சீவ் பிரசாத், தங்க நகைகளில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான உத்தி அல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளார். மாறாக, தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) அல்லது தங்க நாணயங்கள், கட்டிகள் போன்ற நேரடி முதலீடுகளே சிறந்தவை என கூறி உள்ளார்.
நகைகளின் உண்மையான மதிப்பு, வாங்கும் விலையில் 60 முதல் 70 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று அவர் எச்சரித்து உள்ளார். நகையின் விலையில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள அதன் கலப்பு மற்றும் வைரங்களின் மந்தமான செயல்பாடு தங்கத்தின் மதிப்பை குறைக்கும்.
தங்கத்தின் லாபத்தைக் இது கட்டுப்படுத்துகிறது என்று எச்சரித்து உள்ளார். செய்கூலி மற்றும் விலையுயர்ந்த கற்கள், சேதாரம் காரணம் தங்கத்தின் மதிப்பு குறையும். முதலீட்டு தங்கத்தில் இந்த மதிப்புகள் இல்லை. இந்த இழப்புகள் இல்லை. ஒருவர் தங்கள் முதலீட்டை மீட்டெடுக்க, தங்கத்தின் விலை 25 முதல் 30 சதவீதம் உயர வேண்டும். ஆனால் இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை.

தங்கம் முதலீடு
இந்தியக் குடும்பங்கள், 2011 நிதி ஆண்டு முதல் 2026 நிதி ஆண்டின் முதல் பாதி வரை (FY2011-H1FY26) சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் நவரத்தினக் கற்களை வாங்கியுள்ளன. அதேசமயம், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இதே காலகட்டத்தில் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இந்தியக் குடும்பங்களின் தங்க கையிருப்பின் மதிப்பு 2014-15 நிதி ஆண்டில் (FY15) 694 பில்லியன் டாலரிலிருந்து, 2025 நிதி ஆண்டின் முடிவில் 2,113 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தங்கத்தை நம்பி இருந்தால் அது பெரிய பலன் அளிக்காது, பெரிய ரிட்டர்ன் கொடுக்காது., என்று அவர் எச்சரித்து உள்ளார்.
வெள்ளி விலை
அதே சமயம் வெள்ளி விலை உயரும் என்று கணித்துள்ளனர். சர்வதேசச் சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹13,069 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,980 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,995 ஆகவும் உள்ளது. இன்று சென்னை நகரில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹192 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,92,000 ஆகவும் உள்ளது.
சர்வதேச அளவில் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 56 டாலரைக் கடந்து, 56.455 டாலராக உயர்ந்தது. இது, வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்ததாலும், அமெரிக்க மத்திய வங்கி அடுத்த மாதம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பினாலும் ஏற்பட்டது.
மார்ச் 2026 டெலிவரிக்கான வெள்ளி ஃபியூச்சர்கள், மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) சந்தையில் கிலோகிராமுக்கு 9,497 ரூபாய் அல்லது 5.72% அதிகரித்து, 1,75,484 ரூபாயாகப் புதிய சாதனை படைத்தது.
இதேபோல், டிசம்பர் காலாவதிக்கான வெள்ளி விலை கிலோகிராமுக்கு 1,72,099 ரூபாயாக உயர்ந்து, அக்டோபர் 17, 2025 அன்று எட்டியிருந்த முந்தைய உச்சமான 1,70,415 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.












Click it and Unblock the Notifications