இனி நினைத்தாலும் தங்க நகையை.. அடகு வைத்து லோன் எடுப்பது கஷ்டம்.. ஆர்பிஐ விதிகளால் புதிய சிக்கல்!
சென்னை: தங்க நகை லோன் வழங்குவதற்கு ஆர்பிஐ புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் அமலுக்கு வரும் பட்சத்தில், நகையை அடகு வைத்து கடன் வாங்குவது மிகவும் கடினமான விஷயமாக மாறும்.
ஆர்பிஐ வெளியிட்ட இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.

தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்ற வாங்க முடியாது என்று விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
சிக்கலான விதிகள்
தங்க நகை அடகு விதிகளை ஆர்பிஐ கடுமையாக்கி உள்ள காரணத்தால் மக்கள் நகை அடகு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பலரும் கந்துவட்டி கடைக்காரர்களை அணுகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜார்ஜ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான விதிகள் தங்க நகை கடனில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கும். அதோடு புதிய நகை கடன் நிறுவனங்கள் இந்த துறையில் உஷாராக இருக்க சரியாக விதிகளை பின்பற்ற இந்த புதிய விதிகள் காரணமாக இருக்கும். ஆனால் இதனால் நகை கடன்கள் வழங்குவது குறையலாம்., என்று எச்சரித்துள்ளார் .
நகை கடன்
வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications