இந்திய வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. தங்கம் விலையில் பெரிய ட்விஸ்ட்.. கடைக்கு போனவர்களுக்கு ஷாக்
சென்னை: தங்கத்தின் விலை முதல்முறையாக 10 கிராமிற்கு 1 லட்சத்தை தாண்டி உள்ளது. நேரடி தங்க விலை 1 லட்சம் ரூபாயை அடையாமல்.. ரீடெயில் மார்க்கெட் விலை 1 லட்சம் ரூபாயை தாண்டி உள்ளது.
நேற்று மாலை வர்த்தகத்தில் 24 காரட் (999) தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.97,200 என்ற விலையில் விற்றது. இதன் மூலம் தங்கத்தின் ரீடெயில் விலை ரூ.1 லட்சம் மைல்கல்லை எட்டியது. 3% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உடன் தங்கத்தின் விலை ரூ.1,00,116 ஆக விற்பனை ஆனது. இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் 10 கிராமிற்கு ரூ.1 லட்சத்தை அடைந்து உள்ளது. தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை அடையவில்லை என்று ஆசையாக கடைக்கு போனவர்களுக்கு ஜிஎஸ்டி உடன் 1 லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

நேரடி விலை எப்போது 1 லட்சத்தை அடையும்
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்றத்தில் உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை மேலும் உயருமா.. 1 லட்சம் ரூபாயை அடையுமா (அதாவது ஜிஎஸ்டி இல்லாமல்) அல்லது சரியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் MCX தங்கத்தின் விலை சுமார் 25% உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த 5 வருடங்களில் மட்டும் 10 கிராமுக்கு ₹44,906 இலிருந்து ₹95,239 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 17 ஏப்ரல் 2020 முதல் 17 ஏப்ரல் 2025 வரை தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 110%க்கும் அதிகமாக தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,835 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,015 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,460 ஆகவும் உள்ளது.. இப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3245ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3242ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.75 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே, தங்கத்தின் விலை இப்போதைக்கு சரிவு ஏற்படவே வாய்ப்பு இல்லை. தங்கத்தின் விலை கண்டிப்பாக 1 லட்சத்தை தொடும். தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினாள் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications