குண்டுமணி வாங்கினாலும் அதிர்ஷ்டம்தான்! தங்கம் விலை இனி ரூ.1 லட்சம்! சர்வதேச அமைப்பு விடுத்த வார்னிங்
சென்னை: 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $4,500 வரை உயரக்கூடும் என்று வெளிநாட்டு முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்து உள்ளது. உலக பொருளாதாரம் தங்கம் விலை குறித்து இந்த நிறுவனத்தின் கணிப்பு எப்போதுமே பலித்துள்ளது. இந்த நிலையில்தான் தங்கத்தின் விலை $4,500 வரை உயரக்கூடும் என்று இவர்கள் கணித்துள்ளனர். அதிகரித்து வரும் அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை பற்றிய அச்சங்கள் காரணமாக தங்கத்தின் விலை இந்த புதிய உச்சத்தை தொட்டது.
இருப்பினும், கோல்ட்மேன் சாக்ஸ் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை இலக்கை ஒரு அவுன்ஸ் $3,700 ஆக உயர்த்தியது. அப்போது அது நடக்கவில்லை என்றாலும் இப்போது தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 3400 டாலருக்கு மேல் உள்ளது.
மேற்கண்ட அறிவிப்பின்படி 1 அவுன்ஸ் தங்கம் $4,500 என்றால், 1 கிராம் தங்கத்தின் எதிர்கால விலையை இந்திய ரூபாயில் (INR) கண்டுபிடிக்கலாம்.
1 அவுன்ஸ் தங்கத்தை முதலில் கிராமாக மாற்றவும் 1 அவுன்ஸ் = 31.1035 கிராம்
அமெரிக்க டாலரில் ஒரு கிராம் விலை 4500/ 31.1035 = 144.64 டாலர் ஒரு கிராமிற்கு
இப்போது USD ஐ INR ஆக மாற்றவும் சில மாதங்களில் இந்திய ரூபாய் மாற்று விகிதம் 1 அமெரிக்க டாலருக்கு சுமார் ₹85 என்று வைத்துக் கொண்டால்
144.64 × 85 = ₹ 12 ,294.40

அதாவது தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,500 ஆக இருந்தால் இந்தியாவில் 1 கிராம் தங்கத்தின் விலை தோராயமாக ₹12,294. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,517 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,719 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,224 ஆகவும் உள்ளது. அதாவது 10 கிராமிற்கு பதில் 8 கிராம் தங்கமே.. அதாவது 1 பவுன் தங்கமே 98352 ரூபாய்.. அதாவது கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாயை அடையும் என்று கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
வர்த்தக போர் காரணமாக ஏற்பட்ட டாலரின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 3% உயர்ந்து தங்கம் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உச்சம் அடைந்து வருகிறது.
ஸ்பாட் தங்கம் 1 அவுன்ஸுக்கு 2.8% உயர்ந்து $3235ஆக இருந்தது. அமெரிக்க தங்கம் 3.5% உயர்ந்து $3238ஆக இருந்தது. 1 அவுன்ஸ் என்பது 28 கிராம் ஆகும். கிட்டத்தட்ட மூன்றரை பவுன் தங்கத்தின் விலை ஆகும் இது. இதன் இந்திய மதிப்பு 2.72 லட்சம் ரூபாய் ஆகும். உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த தொகையை தங்கம் அடைந்து உள்ளது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினாள் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
உலக தங்க கவுன்சில் சிஇஓ
இந்த நிலையில்தான் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார். உலகின் அளவில் கடன் $76 டிரில்லியனாக உள்ளது, மேலும் $13 டிரில்லியன் கடன் வாங்கப்பட்ட உள்ளது. கட்டணங்களும் பணவீக்கமும் பணத்தின் மதிப்பை குறைக்கும். இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். தங்கம் மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி.
தங்கம் மட்டுமே பாதுகாப்பான முதலீடு. தங்கத்தில் முதலீடு செய்வது மட்டுமே சரியானதாக இருக்கும் . வேறு பாதுகாப்பான வழி இருக்க முடியாது. உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை.., என்று அவர் கூறி உள்ளார். என்ன நடந்தாலும் விரைவில் 10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது 1 லட்சம் ரூபாய் ஆகும்
ஒவ்வொரு வருடமும் தங்கத்தின் விலை 10-22 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. 2022ல் ஜனவரி: ₹5,267 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. டிசம்பர்: ₹5,829 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. ஆண்டு அதிகரிப்பு: ~10.7%
2023ல் ஜனவரி: ₹5,829 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. டிசம்பர்: ₹6,364 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. ஆண்டு அதிகரிப்பு: ~9.2%
2024ல் ஜனவரி: ₹6,364 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. டிசம்பர்: ₹7,800 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. ஆண்டு அதிகரிப்பு: ~22.6% ஆகும்.
அந்த வகையில் பார்த்தால் சில்லறை வர்த்தகத்தில், 24K தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.92,840 ஆகவும், 22K விலை ரூ.85,100 ஆகவும், மற்றும் 18K தங்கத்தின் 10 கிராம் ரூ.69,630 ஆகவும் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. உதாரணமாக, 24K தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் 10 கிராமுக்கு ரூ.90,890 ஆகவும், கனடாவில் 10 கிராமுக்கு ரூ.85,910 ஆகவும், இங்கிலாந்தில் 10 கிராமுக்கு ரூ.86,570 ஆகவும், அமெரிக்காவில் 10 கிராமுக்கு ரூ.85,890 ஆகவும் உள்ளது.
10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட கடைசியில் பெரும்பாலும் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications