Gold Rate today: இன்னைக்கும் அடியோடு குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில் தற்போது பெரிய அளவில் உயராமல் ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையாதா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த இரு மாதங்களில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57,000 என்ற அளவில் இருந்த நிலையில் 10 மாதங்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் உயர்ந்து சுமார் 97,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிர்ச்சி தந்த தங்கம் விலை
இதனால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து பலருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்தது. இப்படியே போனால் ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என பலரும் அச்சமடைந்த நிலையில் கடந்த 20 நாட்களாக சற்று குறைந்தும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை தற்போது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு சவரன் 97 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆன நிலையில் அதன்பிறகு விலையானது சரிவதும், சில நாட்கள் ஏறுவதுமாக இருந்து வருகிறது.
நேற்று விலை குறைந்தது
அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்று சற்று ஆறுதல் தரும்படியாக ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது. அதாவது நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரன் ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் அதிரடி சரிவு
வெள்ளி விலையும், தங்கம் விலையை போலவே ஏறுவதும், இறங்குவதுமான சூழல் நிலவுகிறது. அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது நகை பிரியர்களை மகிழ்ச்சி அடையவைத்தது.
இதனால் இன்று தங்கம் விலை குறையுமா என நகை பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்து நகை பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய ரேட் என்ன?
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.163-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440 (இன்று)
04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000 (நேற்று)
03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800
02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025- ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025- ஒரு சவரன் ரூ.90,400
29.10.2025- ஒரு சவரன் ரூ.90,600
28.10.2025- ஒரு சவரன் ரூ.88,600
27.10.2025- ஒரு சவரன் ரூ.91,600
26.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன்: ரூ.92,000
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 - ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 - ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880.
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications