Gold Rate Today: நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. 2-வது நாளாக இன்றும் குறைந்தது தங்கம் விலை! ஒரு கிராம் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு நகை பிரியர்களை அதிர வைத்த தங்கம் விலை தற்போது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக அவ்வப்போது இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. ஆனாலும் திடீரென விலை உயர்ந்து அதிர்ச்சியும் கொடுக்க தவறுவது இல்லை. இந்நிலையில் நேற்றைப் போலவே இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.71,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு சவரன் ரூ.54 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு கிட்டத்தட்ட 6 மாதங்களில் தங்கம் விலை 15 ஆயிரத்திற்கும் மேல் அதிரடியாக உயர்ந்துவிட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை, சர்வதேச அளவில் ஏற்பட்ட போர் பதற்றம், பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

gold price Chennai gold

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

புதிய உச்சத்தை தினம் தினம் தொட்டு நகை பிரியர்களை அதிர வைத்த தங்கம் விலை தற்போது கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக அவ்வப்போது இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. ஆனாலும் திடீரென விலை உயர்ந்து அதிர்ச்சியும் கொடுக்க தவறுவது இல்லை. நேற்று முன்தினம் விலை அதிகரித்திருந்த நிலையில், நேற்று குறைந்து காணப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 995-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 960-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 935-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று 5-வது நாளாக மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இன்றைய ரேட் என்ன?

சுபமுகூர்த்த நாட்கள் வரிசையாக காத்திருக்க கூடிய சூழலில் தங்கம் விலையில் நேற்று ஏற்பட்ட வீழ்ச்சி நகை வாங்குவோரை மகிழ்ச்சி அடைய வைத்தது. விலை குறைந்தால் வாங்கலாம் என திட்டமிட்ட பலரும் உடனடியாக நகை கடைக்கு சென்றதையும் பார்க்க முடிந்தது. தங்கம் விலை நேற்று சரிந்ததை போல இன்றும் சரியுமா? என்று எதிர்பார்த்தனர். இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்தது. நேற்று ஒரு சவரன் ரூ.71,480க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.71,160 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,895க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கடந்த ஒரு வாரமாக எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:

29.05.2024 - ஒரு சவரன் ரூ.71,160 (இன்று)
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025- ஒரு சவரன் ரூ.71,960
26.05.2025- ஒரு சவரன் ரூ.71,600
25.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
24.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025- ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025- ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025- ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025- ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025- ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025- ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025- ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025- ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025- ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025- ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025- ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025- ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025- ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025- ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+