தவிக்க வைக்குதே தங்கம்.. அதிரடியாக திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய மார்க்கெட் நிலவரம் என்ன?
சென்னை: சென்னை: கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதிரடியாக தங்கத்தின் விலை உயர தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் உயர்ந்து 93 ஆயிரத்து 600 க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து வரலாற்று சாதனை படைத்தது. குறிப்பாக அக்டோபர் 17ஆம் தேதி தங்கம் விலை திடீரென அதிகரித்தது. அன்றைய தினம் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் காரணமாக, நகை விற்பனை கடைகளில் சில நாட்களுக்கு விற்பனை சுறுசுறுபில்லாமல் இருந்தது.
ஆனால், சில நாட்கள் கழித்து தங்கம் விலை திடீரென குறைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அக்டோபர் 22ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 வரை குறைந்தது.
தங்கம் விலை
அதன்பின் அக்டோபர் 28ஆம் தேதி மேலும் ரூ.2,200 சரிந்து, தங்கம் ஒரு சவரன் ரூ.89,000க்கும் கீழ் விற்பனையாகியது. இது கடந்த சில மாதங்களில் மிகக் குறைந்த விலை எனப் பதிவு செய்யப்பட்டது. பொதுவாக, தீபாவளி காலத்தில் தங்கம் வாங்கும் போக்கு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு பிறகு விலை குறையத் தொடங்கியது. இதனால், திருமண நகை வாங்கத் திட்டமிட்ட பலரும் காத்திருந்தனர். எனினும், கடந்த சில நாட்களாக உலக சந்தை காரணங்களால் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
டாலர் மதிப்பு குறைந்ததும், சர்வதேச சந்தையில் தங்கம் மீதான தேவை அதிகரித்ததும் விலை மீண்டும் ஏற்றம் பெற முக்கிய காரணமாக இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.11,410 ஆக விற்பனையானது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.880 உயர்ந்து ரூ.91,280 ஆக உயர்ந்துது.
இன்றைய தங்கம் விலை
வெள்ளி விலையும் இதனுடன் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 அதிகரித்து ரூ.167-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1760 ரூபாய் உயர்ந்து 93 ஆயிரத்து 600க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை அதிகரிக்குமா?
"தங்கத்தின் விலை தற்போது குறுகிய காலத்திலேயே ஏற்ற நிலையில் உள்ளது. உலகளவிலான அரசியல் பதற்றம், டாலர் மதிப்பில் மாற்றம், பங்குச் சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் ஆகியவை தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கின்றன. தீபாவளிக்குப் பிறகு விலை குறைந்தது தற்காலிகமானது தான். அடுத்த சில வாரங்களில் தங்கத்தின் மீண்டும் சிறிய அளவில் உயர வாய்ப்பு உள்ளது. அதே சமயம், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஒரேடியாக அதிக அளவில் வாங்காமல், படிப்படியாகச் சிறு அளவில் வாங்குவது பாதுகாப்பானது" என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications