Gold Rate Today: நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை.. அதிரடியாக உயர்வு.. இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரன் ரூ.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price Chennai gold

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை

இந்தியாவில் ஏழை, பணக்காரர்கள் என எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்கம் மீது பிரியம் உள்ளது. தங்கத்தை அணிகலனாக வாங்குவது மட்டுமல்லாமல் சிறந்த முதலீடாகவும் பலரும் கருதுவதால் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதனை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவது இல்லை.

சொல்லப்போனால், தங்க நகை மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் துவக்கத்தில் இருந்தே கிடு கிடுவென உயர்ந்து வரும் தங்கம் விலை, டொனால்டு டிரம்ப் செய்த அதிரடிகளால் மேலும் அதிகரித்தது. போகிற போக்கை பார்த்தால் 1 லட்சம் ரூபாயை இந்த ஆண்டிலேயே தொட்டுவிடுமோ என நினைக்கும் அளவுக்கு தங்கம் விலை உச்சத்தை தொட்டது.

நேற்று விலை குறைந்தது

கடந்த மாதம் மட்டும் தங்கம் விலை கிராமிற்கு ரூ.9,000-வரை சென்றிருந்தது. அதன் பிறகு இடையிடையே விலை குறைந்தாலும் தற்போது மீண்டும் விலை கூடியுள்ளது. கடந்த 21 ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று விலை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 975-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரன் ரூ.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இன்றைய தங்கம் விலை என்ன

நேற்று விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறையுமா? என்ற ஆர்வம் நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. திருமண சீசன் என்பதால், தற்போது தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால், விலை குறையுமா? குறைந்தால், குறைந்த இந்த நேரத்தில் வாங்கி விடலாம் என மக்கள் ஆர்வத்துடன் தங்கம் விலை நிலவரத்தை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.50 அதிகரித்தது. சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது. இதன்படி இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.71,920க்கும் ஒரு கிராம் ரூ.8,990க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

24.05.2025 - ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025 - ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025 - ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025 - ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025 - ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 - ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025 - ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025 - ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+