Gold Rate Today: ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் தங்கம் விலை.. நகை வாங்க போலாமா? இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்தது. நேற்று முன் தினம் கிராமுக்கு ரூ.35-ம், சவரன் ரூ.280-ம் குறைந்தது. நேற்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு ரூ.50-ம், சவரன் ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ரூ.57,200 ஆக இருந்த தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த 5 மாதங்களில் 73,000 விலையை தொட்டுள்ளது.

gold price Chennai gold

உச்சம் தொடும் தங்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகள், போர் பதற்றம் உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இடையிடையில் கொஞ்சம் குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை உயர்ந்தே வருவது நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது.

போகிற போக்கை பார்த்தால் ஒரு லட்சத்தை இன்னும் சில மாதங்களில் எட்டிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என நினைக்கும் அளவிற்கே தங்கம் விலையானது ஏறி வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற சூழலால், தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி அதனை பல்வேறு நாடுகளும் வாங்கி குவித்து வருகின்றன. தங்கத்தின் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இன்றைய விலை என்ன?

கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் விலை அதிகரித்து வந்து, நேற்று முன்தினம் விலை குறைந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரன் ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

23.05.2025 - ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025 - ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025 - ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 - ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025 - ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025 - ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025 - ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+