Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் கலக்கம்.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருதால் நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நேற்று சவரனுக்கு ரூ.960 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையுமா என்று நகைப் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்தது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 72,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழலை பொறுத்து தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. அதிலும் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. இடையிடையே விலை சரிந்தாலும் கூட விலை ஏறும் நாட்கள்தான் அதிகமாக உள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் அவர் விதிக்கும் வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்கு காரண்மாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி உக்ரைன் - ரஷ்யா போர், பல்வேறு நாடுகள் இடையே நீடிக்கும் போர்ப் பதற்றம் என தங்கத்தின் விலையின் வரலாறு காணாத விலையேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதாவது உலக பொருளாதார சூழலில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. தங்கத்தின் தேவையும் உயர்ந்து இருப்பதால் விலை வேகவேகமாக உயர்ந்து வருகிறது. போற போக்கை பார்த்தால் சவரன் ஒரு லட்சம் என்பது இந்த ஆண்டே நடந்தாலும் கூட வியப்பதற்கு இல்லை என நினைக்கும் அளவுக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
இன்றைய தங்கம் ரேட்
இதனால், தங்கம் நகை பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மே 9 ஆம் தேதியான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 920 குறைந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9,015 க்கும் சவரன் ரூ.72,120 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருவதால் விலையானது இன்று கூடுமா இல்லை நேற்றை போலவே குறைந்து சர்ப்ரைஸ் கொடுக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண் தங்கம் ரூ.72,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9,045க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360 (இன்று)
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560












Click it and Unblock the Notifications