Gold rate today: தாறுமாறாக அதிகரிப்பு.. 3-வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை கடந்த 8 நாட்களாக தொடர்ச்சியாக குறைந்தபடி வந்த நிலையில் ஜூலை 1 ஆம் தேதி அன்று திடீரென உயர்ந்தது. தொடர்ந்து 2 வது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கம் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.1200 உயர்ந்தது. இதனால் கலக்கமடைந்துள்ள நகைப் பிரியர்கள் இன்றாவது குறையுமா என எதிர்பார்த்தனர். ஆனால் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஜூலை 1 முதல் இன்று வரை தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்த நிலையில், அடுத்த 6 மாதங்களில் சுமார் 20 ஆயிரம் அதிகரித்துள்ளது. தங்கத்தை பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடாக பலரும் கருதுவதால் தங்கத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உச்சம் தொடும் தங்கம் விலை
இதனால், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரித்துள்ளதும் முக்கிய காரணமாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் சேர்த்து தங்கத்தின் மீதான விலையை கடுமையாக உயர வைத்துவிட்டது.
நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக்கொண்டே சென்றதால், இனி தங்கத்தை கனவில் தான் நினைத்து பார்க்க முடியுமோ என நகைப் பிரியர்கள் கலக்கம் அடைந்தனர். இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை, தொடர்ந்து 8 நாட்களாக தங்கம் விலை சரிந்து வந்தது. அதாவது திங்கள் கிழமை வரை தங்கம் விலை குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது.
இன்றைய ரேட் என்ன?
நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்து இருந்தது. நேற்றும் அதே போல் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரன் ரூ.360-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து அதிர வைத்தது. தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியிருப்பது நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து 3 வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதன் மூலம் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.9,105க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் வெள்ளி விலையும் ரூ.1 அதிகரித்து கிராம் ரூபாய் 121க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலவரம்:
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ. 72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440
28.06.2025 - ஒரு சவரன் ரூ. 71,440
27.06.2025 - ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications