Gold Rate Today: இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8 ஆயிரத்தை நெருங்கியது
சென்னை: நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்து தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், நேற்றும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரு பவுன் தங்கம் விலை நேற்று சென்னையில் ரூ.63 ஆயிரத்தை தாண்டியது. இன்று விலை கூடுமா அல்லது குறையுமா என்று நகைப்பிரியர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.7930க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.63,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருகிறது. நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்தே உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிராம் ரூ.7,150-க்கும், ஒரு பவுன் ரூ.57, 200-க்கும் விற்பனை ஆனது. ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து கொண்டே வந்ததால் விரைவில் ரூ. 60 ஆயிரத்தை தங்கம் விலை தொட்டாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என நினைத்து இருருந்த நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதியே ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் என்ற விலையை கடந்து புதிய உச்சத்தை தங்கம் பதிவு செய்தது.

ஒரு பவுன் ரூ.63 ஆயிரம்
அதன்பிறகும் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஒரு சில நாட்கள் விலை குறைந்தாலும் விலை ஏறும் நாட்களே அதிகமாக உள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி ரூ.61 ஆயிரத்தை கடந்தது. கடந்த 1-ந் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.62 ஆயிரத்தையும் கடந்து இதுவரை இல்லாத விலை உயர்வாக இருந்து வந்தது. கடந்த 3-ந் தேதி மட்டும் இடையில் விலை குறைந்த நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.7,905-க்கும், ஒரு பவுன் ரூ.63, 240-க்கும் விற்பனை ஆனது.
இன்றைய தங்கம் விலை எவ்வளவு?
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7930க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.63,440 ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் அடுத்த ஒரு வாரத்துக்குள் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.8 ஆயிரத்தை தாண்டிவிடும் என்று நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வியாபாரிகள் சொல்வது என்ன?
தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ.6 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதாலும், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை தொடருவதாலும் தங்கம் விலை தொட்ர்ந்து ஏற்றம் சந்தித்து வருகிறது. இதனால், வரும் நாட்களிலும் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்றுதான் வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இப்படியே போனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 70 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அளிக்குமோ என நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். மார்ச் மாதத்துக்குள் ஒரு கிராம் ரூ.8 ஆயிரம், ஒரு பவுன் ரூ.64 ஆயிரம் என நகை வியாபாரிகள் கணித்து இருந்தனர். ஆனால் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் இந்த மாதமே இந்த விலையை எட்டினாலும் ஆச்சர்யபட வேண்டியது இல்லை என்ற நிலைதான் உள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:
06.02.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ. 63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ. 62,400
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,960
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
31.01.2025- ஒரு சவரன் ரூ.61,840
30.01.2025- ஒரு சவரன் ரூ.60,880
29.01.2025- ஒரு சவரன் ரூ.60,760
28.01.2025- ஒரு சவரன் ரூ.60,080
27.01.2025- ஒரு சவரன் ரூ.60,320
26.01.2025- ஒரு சவரன் ரூ.60,440












Click it and Unblock the Notifications