Gold Rate Today: Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து இருந்தது. இதனால் இன்றும் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று அதிர்ச்சி தந்துள்ளது தங்கம் விலை. தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்க நகை சென்னையில் ரூ.8,950க்கும், ஒரு சவரன் தங்க நகை ரூ.71,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையை பொறுத்தவரை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கிடுகிடுவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ.54 ஆயிரமாக இருந்த தங்கம் விலை வெறும் ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட ரூ.18 ஆயிரம் உயர்ந்து அதிர வைத்துள்ளது.

பொருளாதார நிச்சயமற்ற சூழல்
கடந்த ஆண்டு தங்கம் வாங்கியவர்கள் எல்லாம் நல்ல வேளை இப்பவே வாங்கிவிட்டோம் என நிம்மதிபெரு மூச்சு விட வைக்கும் வகையில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட வரி விதிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஆகியவை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு இதுவே மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை சற்று குறைந்து இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை கொடுத்தது. இருந்தாலும் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே தங்கம் விலை இருந்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே வருவது நகை பிரியர்களை கலக்கம் அடைய வைத்து வருகிறது.
ஒரு சவரன் தங்கம் எவ்வளவு
குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்துடன் காணப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 710-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது. மறுநாளே, அதாவது 21 ஆம் தேதி கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 930-ம், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த விலையானது மேலும் அதிகரித்து கடந்த 24 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 990-ம் , ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 920-ம் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.40-ம், ஒரு சவரன் ரூ.320-ம் குறைந்து முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 950-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், 4 நாட்களாக விலை மாற்றம் இன்றி, ஒரு கிராம் ரூ.111-ம், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை என்ன?
தங்கம் விலை நேற்று சட்டென ரூ.320 சவரனுக்கு குறைந்தது, நகை பிரியர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுத்தது. திருமண விசேஷங்கள் வரும் நாட்களில் அதிகமாக உள்ளது. இதனால், தங்க நகை வாங்குவோர்கள் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறதா? என எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,995க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.71,960க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
27.05.2025 - ஒரு சவரன் ரூ.71,960 (இன்று)
26.05.2025 - ஒரு சவரன் ரூ.71,600 (நேற்று)
25.05.2025 - ஒரு சவரன் ரூ.71,920
24.05.2025 - ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025 - ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025 - ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
17.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
16.05.2025 - ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025 - ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025 - ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025 - ஒரு சவரன் ரூ. 70,840
13.05.2025 - ஒரு சவரன் ரூ.70,120
12.05.2025 - ஒரு சவரன் ரூ.70,000
12.05.2025 - ஒரு சவரன் ரூ.71,040
10.05.2025 - ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025 - ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025 - ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,800
06.05.2025 - ஒரு சவரன் ரூ.72,200
05.05.2025 -ஒரு சவரன் ரூ.71,100
05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
30.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
29.04.2025 - ஒரு சவரன் ரூ.71,840
28.04.2025 - ஒரு சவரன் ரூ.71,520
27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560.












Click it and Unblock the Notifications