Today Gold Rate: மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளிலேயே இன்ப அதிர்ச்சி! இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரகாலமாக வீழ்ச்சி அடைந்து வருவது நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், நகை வாங்குவோர் அதிக அளவில் நகைகளை வாங்க ஆரம்பித்து உள்ளனர். தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தை நிலவரம், பொருளாதார ஸ்திரதன்மை உள்ளிட்டவை அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் தங்கம் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

today-gold-rate-in-chennai-30-06-2025-will-price-raise-or-fall-check-details

74 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் 74 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இஸ்ரேல் - ஈரான் மோதல் தணிந்துள்ள சூழலில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. அதிலும் கடைசி சில நாட்களாக வேகமாக சரிந்து வருவது மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், கடந்த ஒருவாரமாக தங்கம் விலை வேகமாக சரிந்து வருகிறது.

பவுனுக்கு இதுவரை ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் சரிந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, தங்கம் விலை ரூ.71,440- ஆக உள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வருவது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கல்யாண முகூர்த்த தேதி ஆகியவை வரிசையாக உள்ளதால், நகை விலை இன்னும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இன்றைய ரேட் என்ன?

இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இன்று விலை குறையுமா? என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். ஞாயிற்றுக்கிழமை நேற்று விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை எப்படி இருக்கப் போகுது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ. 71,440 விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ. 8,930க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.119 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

30.06.2025- ஒரு சவரன் ரூ. 71,320 (இன்று)
29.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440 (நேற்று)
28.06.2025- ஒரு சவரன் ரூ. 71,440
27.06.2025- ஒரு சவரன் ரூ.71,880
26.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+