Today Gold Rate: அப்பாடா! திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. அதிரடியாக சரிவு.. இன்றைய ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் நகை பிரியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் தங்கம் விலை அதிகரித்து இருந்த நிலையில், இன்றாவது விலை குறைய வாய்ப்புள்ளதா? என்று எதிர்பார்த்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து ரூ.63,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூபாய் 100 குறைந்து 7,890 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 108க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இடையில் ஒரு சில நாட்கள் விலை இறங்கினாலும் அது சொற்ப அளவில்தான் குறைகிறது.

தங்கம் விலை
ஆனால் விலை ஏறும் போது விறுட்டென ஏறிவிடுகிறது. இதனால், இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். இப்படியே போனால் தங்கம் விலை 70 ஆயிரத்தை தொடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை எனவும் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை குறைந்தது
நேற்றைய முன் தினம் (பிப்.13) சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ. 63,840-க்கு விற்பனையானது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,920-க்கும் ஒரு கிராம் ரூ.7990-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வரும் சூழலில் தங்கம் விலை இன்று எப்படி இருக்கும்? விலை குறைய வாய்ப்பு உள்ளதா? என நகை பிரியர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை எவ்வளவு
அதாவது சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 100 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 800 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.63,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 108 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகை வியாபாரிகள் சொல்வது என்ன
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக பங்கு சந்தைகளில் தடுமாற்றமும், சரிவும் காணப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் மேலும் அதன் விலை அதிகரிக்கக் கூடும் என்றே வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த 5 ஆம் தேதி ஒரு பவுன் ரூ.63 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன்பிறகும் தொடர்ந்து தங்கம் விலை ஏறிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை:
15.02.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025 (நேற்று) - ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்).












Click it and Unblock the Notifications