Gold Rate Today: அடித்தது ஜாக்பாட்.. 2வது நாளாக தங்கம் விலை இன்றும் குறைந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் உச்சம் தொட்டும் வரும் தங்கம் விலையை பார்த்து இனி கனவில் தான் தங்கம் வாங்க முடியுமோ என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், நேற்று சற்று ஆறுதல் தரும் வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. இந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் மீண்டும் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது.

தங்கம் விலையானது கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. தங்கம் விலை போகும் போக்கை பார்த்தால் இனி தங்கம் வாங்குவது எல்லாம் கனவில் தான் நடக்கும் போல நினைக்கும் அளவுக்கு விலையானது வேகமாக உயர்ந்து வருகிறது.

gold price Chennai gold

ஜெட் வேகத்தில் தங்கம் விலை

கடந்த ஆண்டு ரூ.55 ஆயிரமாக இருந்த தங்கம் விலை இந்த ஆண்டு துவக்கத்திலேயே 60 ஆயிரத்தை தொட்டது. ஏதோ கிரிக்கெட் போட்டியில் அதிரடி பேட்ஸ்மேன் களத்தில் நின்றால் ரன் ரேட் எப்படி எகிறுமோ அதைப்போல தங்கம் விலை தினம் தினம் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது.

65 ஆயிரத்தை தாண்டிவிடுமோ என ஜனவரியில் அச்சப்பட்ட தங்க நகை பிரியர்களை இனி 80 ஆயிரத்தை எப்போது தொடுமோ என நினைக்கும் அளவுக்கு விலையானது ஜெட் வேக்த்தில் உயர்ந்து விட்டது. அதிலும் மார்ச் மாதத்தில் இருந்து தங்கம் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அவர் மேற்கோண்டு வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், பதிலுக்கு சீனா போடும் பதிலடி வரி என சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு அசாதாரண சூழல் தற்போது நிலவுகிறது.

தங்கம் விலை குறைந்தது

தற்போது நிலவும் பொருளாதார சூழலுக்கு தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பலரும் கருதுவதால் அதன் மீதான நுகர்வு அதிகரித்துள்ளது. இதுவும் தங்கம் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் சில நாட்கள் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

அதாவது, கடந்த 9 ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ரூ.68 ஆயிரம், ரூ.69 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என புதிய உச்சங்களை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உயரத்தையும் எட்டியது. தொடர்ந்து 5 நாட்களாக விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்து இருந்தது.

இன்றைய தங்கம் விலை என்ன

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரன் ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளே தங்கம் விலை கொஞ்சம் குறைந்தது நகை பிரியர்களை சற்று நிம்மதியடைய வைத்தது.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.70,040 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.280 குறைந்து, ரூ.69,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.8,770 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.35 குறைந்து ரூ.8,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எவ்வளவு

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்களிலும் தங்கம் விலை சற்று குறைந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று குறைந்தது தங்க நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தது. நேற்றை போலவே தங்கம் விலை இன்றும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை கடந்த ஒரு வார நிலவரம்

15.04.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.70,040
14.04.2025 - ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025 - ஒரு சவரன்: ரூ.70,160
12.04.2025 - ஒரு சவரன்: ரூ.70,160
11.04.2025 - ஒரு சவரன்: ரூ.69,960
10.04.2025 - ஒரு சவரன்: ரூ.68,480
09.04.2025 - ஒரு சவரன்: ரூ.67,280
08.04.2025 - ஒரு சவரன்: ரூ.65,800
07.04.2025 - ஒரு சவரன்: ரூ.66,280

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+