Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் மீண்டும் 9,000-ஐ தாண்டியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்து சர்ப்ரைஸ் கொடுக்காதா என நகைப்பிரியர்கள் ஏங்கி இருந்தனர். ஆனால் தங்கம் விலை இன்று ஒரே அடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒரு கிராம் தங்கம் மீண்டும் ரூ.9 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த மாதம் இதே (06.04.2025) நாளில் ஒரு சவரன் தங்கம் ரூ. 66,480க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் நேற்று மாலை மற்றும் இன்று காலை என ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2000 அதிகரித்துள்ளது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gold price Chennai gold

ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக நடப்பு ஆண்டு ஜனவரியில் இருந்து தங்கம் விலை ஜெட் வேகத்தில் செல்கிறது. குறையும் போது பெயரளவுக்கு மட்டுமே குறையும் தங்கம் விலை அதிகரிக்கும் போது மட்டும் ஒரே அடியாக உயர்ந்து விடுகிறது. இதனால் இனி கனவில் தான் நகை வாங்க முடியுமோ என நடுத்தர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் உலக நாடுகள் மத்தியில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமை, போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து இருப்பதே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் எவ்வளவு

கடந்த மாதம் (06.04.2025) இதே நாளில் தங்கம் விலை 66,480க்கு ஒரு சவரன் தங்கம் விற்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 12 ஆம் தேதி ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தொட்டது. 6 நாட்களில் சுமார் 4 ஆயிரம் ரூபாய் அதிகரித்து இருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது. தொடர்ந்து கடந்த மாதம் 22 ஆம் தேதி ஒரே அடியாக உயர்ந்த தங்கம் விலை ரூ. 74,320க்கு சென்றது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் குறைந்த விலையாக 8 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ 65,800-க்கும், அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தங்கம் விலை சற்று குறைந்து நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் கொடுத்தது என்றே சொல்லலாம். 74 ஆயிரம் வரை சென்ற தங்கம் விலை தற்போது 70 ஆயிரத்தில் உள்ளது. நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.160 உயர்ந்து, 70,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய ரேட் என்ன?

மே 5 ஆம் தேதியான நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 8,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் உச்சம் தொட்ட தங்கம் விலை இந்த மாதத்தில் கொஞ்சம் குறைந்துள்ளது. இதனால் இன்றும் தங்கம் விலை குறைந்து சற்று ஆறுதல் தராதா என நகைப்பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது. தங்கம் விலை இன்றும்அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் நேற்று காலை ஒரு சவரன் ரூ.70,00க்கு விற்கப்பட்ட தங்கம் நேற்று மாலை சவரனுக்கு ரூ.1000 அதிகரித்தது. இன்று சவரனுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.72,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.8,775க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 125 மற்றும் இன்று காலை ரூ.125 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.9,025க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மீண்டு தங்கம் விலை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.111க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலவரம்:

05.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025 - ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025 - ஒரு சவரன் ரூ.70,200

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+