தங்கத்தின் விலை சரமாரியாக சரியும்.. கவனமாக இருங்கள்.. பிரபல பொருளாதார வல்லுனர் வார்னிங்!
சென்னை: சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரமாரியாக சரியும் என்று பிரபல யுபிஎஸ் வங்கியின் ஆய்வாளர் கியானாவி ஸ்டாவ்நோவா எச்சரித்து உள்ளார்
சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,289.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,301 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3400 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் ரூபாய் கடந்த 2 நாட்களில் தங்கத்தின் மதிப்பில் சரிந்து உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,573 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,775 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,250 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை சரியும்
இந்த நிலையில்தான் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரமாரியாக சரியும் என்று பிரபல யுபிஎஸ் வங்கியின் ஆய்வாளர் கியானாவி ஸ்டாவ்நோவா எச்சரித்து உள்ளார். அவர் விடுத்த எச்சரிக்கையில்,
தங்கம் விலை 1 அவுன்ஸுக்கு $3,100 க்கு கீழ் குறையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். $2,800-$2,900 என்ற நிலைகளுக்கு சரியவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இப்போது இருக்கும் 3200 டாலர் என்ற நிலை இருக்காது. கிட்டத்தட்ட 1 அவுன்ஸுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரை குறைய போகிறது.
நிலைமை மோசமாகும். இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன என்றும் அவர் பட்டியலிட்டு உள்ளார்.
1. அமெரிக்க வர்த்தக போர் நினைத்த அளவிற்கு மோசமாக இல்லை.
2. டிரம்ப் கொஞ்சம் பயம் காட்டினாலும் பின்னர் கருணையும் காட்டுகிறார்.
3. இதனால் சரிந்த மார்க்கெட் மீள்கிறது.
4. இதனால் டாலர் மதிப்பு உயருகிறது.
5. டாலர் மதிப்பு உயர்ந்தால் மக்கள் அதையே வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு பாதுகாப்பிற்கு தங்கம் தேவை இல்லை.
6. பாதுகாப்பிற்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை.
7. இதனால் தங்கத்தின் தேவை குறையும். அதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு குறையும்.
8. இதுதான் கடந்த ஒரு வாரமாக சர்வதேச மார்க்கெட்டில் நடக்க தொடங்கி உள்ளது.
9. இப்போது தங்கம் விலை அதிகரிக்கிறது. இது இப்படியே நீடிக்காது. அடுத்த சில நாட்களில் சரிவுகள் வேகமாக குறைய தொடங்கும். தங்கத்தின் விலை இன்று அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $140 குறைந்துள்ளது.
10. இதன் மூலம் தங்கத்தின் விலை அங்கே $143.60 அல்லது 4.20% குறைந்துள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் 16,206 ரூபாய் தங்கம் விலை இதன் மூலம் சரிந்து உள்ளது.
11. தங்கத்தின் விலை வர்த்தக போரால் உயர்ந்தது. ஆனால் இது இப்படியே அதிகரிக்காது. அடுத்த 12 மாதங்களில் இந்த விலை வேகமாக சரியலாம்.. அடுத்த 12-18 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications