இன்னும் ரூ.1320 தான் இருக்கு.. தங்கம் விலையில் செம ட்விஸ்ட்.. எக்ஸ்பர்ட் சொன்ன மாதிரியே நடக்குதே!
சென்னை: சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,868 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,045 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,455 ஆகவும் உள்ளது. அதாவது 10 கிராம் தங்கம் தற்போது 98680 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இதன் மூலம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடைய இன்னும் 1320 ரூபாய் மட்டுமே உள்ளது. தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் 1800 ரூபாய்க்கு மேல் குறைந்தது. இதனால் 1 லட்சம் ரூபாயை தங்கத்தின் விலை அடையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் 4 நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் விலை உயர தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் அதிகரித்து $3,249.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.4 சதவீதம் குறைந்து $3,299 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.2 சதவீதம் உயர்ந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3299 டாலர் என்று உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில் உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் உயர்ந்து உள்ளது.
தங்கம் வாங்க சரியான நேரம் இதுவா?
1. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
2. தற்போது தங்கம் விலை இரண்டு வாரங்களாக குறைவதால் தங்கம் கொஞ்சம் குறைவான விலையில் கிடைக்கும்.
3. இப்போது விலை குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.
4. எதிர்காலத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும். அதனால் இப்போது இரண்டு வாரங்களாக விலை குறையும் போதே அதை வாங்கிக்கொள்வது சரியாக இருக்கும்.
தங்கம் விலை உயருமா?
இதனால் உலக அளவில் தொடர்ந்து தங்கம் விலை சரியுமா அல்லது உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் தங்கத்தின் விலை சரியாது கண்டிப்பாக உயரும் என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.
என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.
முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications