Gold rate today: தமிழ் புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி! தங்கம் விலை சரிவு! நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து அதிர்ச்சியளித்து வரும் நிலையில், தமிழ் புத்தாண்டான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆண்டின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை உயருமா அல்லது தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுக்குமா என்று நகைப்பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரு சவரன் 70 ஆயிரத்தை தொட்டு விடுமோ என்று பேசப்பட்ட நிலையில், இனி 80 ஆயிரத்தை தொட்டு விடுமோ என எண்ணும் அளவிற்கு விலையேற்றமானது சர்வ சாதாரணமாக உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை
ஒவ்வொரு நாளும் புதிய விலை உயர்வு என்ற அடிப்படையில், வரலாறு காணாத புதிய உச்சத்தை கடந்து வந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் தங்கம் விலை அதிகம் உயரவில்லை. அப்போது ஒரு சவரன் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு ஜெட் வேகத்தில் விலை உயர ஆரம்பித்தது.
இதனால், தங்கம் விலை ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஒரு சவரன் 60 ஆயிரத்தை தொட்டது. பின்னர் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இடையிடையில் விலை குறைந்தாலும் பெரும்பாலான நாட்களில் விலை அதிகரித்தே காணப்பட்டது. கடந்த மார்ச் 14 மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை தாண்டியது. அதற்கு அடுத்த ஒரு மாதத்திற்குள் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து ஒரு பவுன் 70 ஆயிரத்தை தொட்டுள்ளது.
இன்றைய ரேட் என்ன?
இப்படி தொடர்ந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தங்கம் விலை கொடுத்து வரும் நிலையில், தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை தொட்டாலும் வியப்பதற்கு இல்லை என்று சொல்லும் அளவுக்கு விலை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 8,770க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8755க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று நேற்று சென்னையில் ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை கூடுமா அல்லது விலை குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுக்குமா? என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளே விலை குறைந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த ஒரு வார தங்கத்தின் விலை நிலவரம்
14.04.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025 - ஒரு சவரன்: ரூ.70,160
12.04.2025 - ஒரு சவரன்: ரூ.70,160
11.04.2025 - ஒரு சவரன்: ரூ.69,960
10.04.2025 - ஒரு சவரன்: ரூ.68,480
09.04.2025 - ஒரு சவரன்: ரூ.67,280
08.04.2025 - ஒரு சவரன்: ரூ.65,800
07.04.2025 - ஒரு சவரன்: ரூ.66,280
06.04.2025 - ஒரு சவரன் ரூ.66,480
05.04.2025 - ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025 - ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025 - ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025 - ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025 - ஒரு சவரன் ரூ.68,080
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மோதல் குறிப்பாக அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையே நடைபெறும் வரி மோதல் காரணமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான் முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துவருவதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications