Gold Rate Today: கிடுகிடு உயர்வு.. மீண்டும் புதிய உச்சம் தொட்டம் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகை பிரியர்கள் தலையில் இடி விழும் அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று சிறிது குறைந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து நகைபிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ840 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,810க்கும் சவரன் ரூ.62,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆக்ரோஷமான வரி விதிப்பு கொள்கையாளும், மெக்சிகோ, கனடா நாடுகளை மிரட்டி பிரிக்ஸ் கூட்டமைப்பு மீதும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்ததனாலும், சர்வதேச வர்த்தகத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரித்துள்ளது.

gold price chennai gold

தங்கம் விலை மேலும் உயர்வு

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே இன்று நேற்றை போலவே தங்கம் விலை இறங்குமா அல்லது மீண்டும் ஏறுமுகத்தில் சென்று விடுமா? என்பதை நகை பிரியர்கள் திகிலுடன் எதிபார்த்துக் கொண்டு இருந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

நகை பிரியர்கள் தலையில் இடி விழும் அளவிற்கு தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூபாய் 840 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூபாய் 105 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,810க்கும், சவரன் ரூ.62,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ. 61,960க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 840 உயர்ந்து 62,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு

தங்கம் விலை இன்று ஏறினாலும், வெள்ளி விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூபாய் 1 குறைந்துள்ளது. இதன் மூலம் வெள்ளி கிராமுக்கு ரூ.106க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு 2025 ஆம் ஆண்டில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்தே வருகிறது. நடப்பு ஆண்டில் மிக குறைந்த விலையாக ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஒரு கிராம் 7,150க்கு விற்பனை செய்யபட்டது.

தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பு

சர்வதேச சந்தை மதிப்புகள் அடிப்படையில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. நேற்று முன் தினம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. எம்.சி.எக்ஸ் தங்கம் விலை சரிவில் இருந்து மீண்டும் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டது.

அதேபோல, இந்தியாவில் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. டிரம்ப் தற்போது அடுத்தடுத்து புதிய இறக்குமதி வரிகளை விதித்து வருவதால், வர்த்தக போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது தங்கம் விலையிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தது போலவே இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக LKP செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் நாணய ஆராய்ச்சி துணைத் தலைவர் ஜதீன் திரிவேதி கூறியதாவது:- டிரம்பின் ஆக்ரோஷமான வரி விதிப்பு கொள்கையால் டாலர் மதிப்பு வலுவாகும். மெக்சிகோ, கனடா நாடுகளை மிரட்டிய டிரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்பு மீதும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். எனவே சர்வதேச வர்த்தகத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதனால், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரித்துள்ளது" என்றார்.

நேற்றைய தங்கத்தின் விலை

சென்னையில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ 61,960-க்கும், கிராமுக்கு ரூ 15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 7745-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 62,320-க்கு விற்பனையானது. இதனால் இனி தங்கம் விலை அதிகரித்துக்கொண்டே தான் செல்லும் என்று மக்கள் நினைத்த நிலையில், நேற்று (3-ஆம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு ரூ 680 சரிந்தது. இதன்படி நேறும் ஒரு சவரன் தங்கம் ரூ 61,640-க்கும் ஒரு கிராம் ரூ 7705-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ 107-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை நிலவரம்:

04.02.2025 (இன்று) ஒரு சவரன் ரூ. 62,400
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,960
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
31.01.2025- ஒரு சவரன் ரூ.61,840
30.01.2025- ஒரு சவரன் ரூ.60,880
29.01.2025- ஒரு சவரன் ரூ.60,760
28.01.2025- ஒரு சவரன் ரூ.60,080
27.01.2025- ஒரு சவரன் ரூ.60,320
26.01.2025- ஒரு சவரன் ரூ.60,440

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+