தங்கம் விலை.. ரூ.1 லட்சத்தை அடைய போகிறது.. வாங்குறவங்க இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்க.. முக்கியம்
சென்னை: 10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,284 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,510 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,020 ஆகவும் உள்ளது.
வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது.
வர்த்தக போர்
அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்வரும் காரணங்கள் உள்ளன. இந்தியா, கனடா, சீனா, மெக்சிகோ, ஐரோப்பா, உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக டிரம்ப் வர்த்தக போரை அறிவித்துள்ளார். சீனாவிற்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போரை அறிவித்த நிலையில் அமெரிக்காவின் முடிவிற்கு பதிலடியாக சீனா பதில் வரியை விதித்து உள்ளது.
தங்கம் விலை உயர்வு
இதனால் உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்.. இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை..தங்கத்தை விட வேறு சிறப்பான முதலீடு இல்லை என்று உலக தங்க கவுன்சில் தலைவர் டேவிட் டெய்ட் கூறி உள்ளார். அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், வர்த்தக போர் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கிகள் பல தங்கத்தை நோக்கி நகர்வது ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை உயரும் அவலம் ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் பல பணவீக்கம் காரணமாக டாலருக்கு பதில் தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளது. டாலர் கையிருப்பிற்கு பதிலாக தங்கத்தை குவிக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் வர்த்தக போர் பதற்றம் காரணமாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இதனால் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தினமும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை உயருகிறது. டாலரின் மதிப்பு 0.2- 0.3 சதவிகிதம் வரை குறைகிறது. இப்போது வர்த்தக போர் தொடங்கினாள் சர்வதேச அளவில் 1 அவுன்ஸ் தங்கம், அதாவது கிட்டத்தட்ட 4 பவுன் நகையின் விலை தற்போது இருக்கும் விலையை விட 17 ஆயிரம் ரூபாய் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் 4 ஆயிரம் ரூபாய் வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டு உள்ளது.
எப்போது 1 லட்சம் ரூபாய் ஆகும்
ஒவ்வொரு வருடமும் தங்கத்தின் விலை 10-22 சதவிகிதம் உயர்ந்து உள்ளது. 2022ல் ஜனவரி: ₹5,267 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. டிசம்பர்: ₹5,829 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. ஆண்டு அதிகரிப்பு: ~10.7%
2023ல் ஜனவரி: ₹5,829 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. டிசம்பர்: ₹6,364 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. ஆண்டு அதிகரிப்பு: ~9.2%
2024ல் ஜனவரி: ₹6,364 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. டிசம்பர்: ₹7,800 ஆக தங்கத்தின் விலை 1 கிராமிற்கு இருந்தது. ஆண்டு அதிகரிப்பு: ~22.6% ஆகும்.
அந்த வகையில் பார்த்தால் சில்லறை வர்த்தகத்தில், 24K தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.92,840 ஆகவும், 22K விலை ரூ.85,100 ஆகவும், மற்றும் 18K தங்கத்தின் 10 கிராம் ரூ.69,630 ஆகவும் உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது. உதாரணமாக, 24K தங்கத்தின் விலை ஆஸ்திரேலியாவில் 10 கிராமுக்கு ரூ.90,890 ஆகவும், கனடாவில் 10 கிராமுக்கு ரூ.85,910 ஆகவும், இங்கிலாந்தில் 10 கிராமுக்கு ரூ.86,570 ஆகவும், அமெரிக்காவில் 10 கிராமுக்கு ரூ.85,890 ஆகவும் உள்ளது.
10 கிராம் தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்களில் 1 லட்சம் ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட கடைசியில் பெரும்பாலும் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை அடையும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
நான் வந்துட்டேன்.. மீண்டும் கெத்தாக திரும்பிய தங்கம்! டாலரால் தலைகீழான மார்க்கெட்! அடுத்து என்ன? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications