தீபாவளி நெருங்குது.. தங்கம் வாங்க போறீங்களா? எவ்வளவு கேரட் வாங்குவது பெஸ்ட் தெரியுமா? 18K நல்லதா?
சென்னை: தீபாவளி நெருங்கும் நிலையில் இந்தியாவில் மக்கள் தங்கம் வாங்கும் அளவும் அதிகரித்து வருகிறது. பொதுவாக பண்டிகை நாட்களுக்கு முன்பாக மக்கள் தங்கம் வாங்குவது அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது தீபாவளிக்கு முன்பாக பலரும் தங்கம் வாங்குகிறார்கள். முக்க்கியமாக 18 கேரட் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இடை இடையே குறைந்தாலும்.. தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் மக்கள் பலரும் 22, 24 கேரட் தங்கத்திற்கு பதிலாக 18 கேரட் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
18 கேரட் தங்கம்
தங்கத்தின் விலை 2024ல் 25% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2025ல் தங்கத்தின் விலை இதுவரை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். இதனால் மக்கள் பலரும் இதை விரும்புகின்றனர். முக்கியமாக திருமண சீசனில் அதிகம் பயன்படுத்த இதை வாங்குகின்றனர். இதனால் கூடுதல் சீர் கொடுக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்
நீங்கள் வீட்டில் தங்கத்தை ஒரு வரம்பு வரை சேமித்து வைத்தால், யாரும் உங்கள் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவே உங்கள் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் - திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமாகாத ஆண்கள்- திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான பெண்கள்- திருமணமான பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான ஆண்கள் - அதேசமயம் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
அதுவே பெண்கள் 500 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் ஆண்கள் 250 கிராம் வரை 22 கேரட் தங்கத்தில் பில் இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும். உங்கள் வீட்டில் இந்த குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
எந்த தங்கம் வாங்குவது பெஸ்ட்?
இதில் 22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக நீங்கள் தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
காரட் தங்கம்- இந்த விளக்கம் தெரியுமா?
காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.
24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும். இன்று நிலவரப்படி சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,791 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,975 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,395 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications