Gold rate today: தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை..நகை பிரியர்களுக்கு ஆறுதல்! இன்றைய ரேட் என்ன?
சென்னை: வரலாற்றில் இல்லாத அளவாக கடந்த 8 ஆம் தேதி தங்கம் விலை புது உச்சம் தொட்டது. அதன் பிறகு தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த வாரம் விலை சற்று சரிந்தது. இதனால் இந்த வாரமும் விலை சரியுமா? என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்று நகைபிரியர்கள் காத்திருந்த நிலையில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனை ஆகின்றது. வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம். நம் நாட்டில் தங்கம் நகைகளாகவும் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கம் மீது அலாதி பிரியம் கொண்டு இருப்பதை பார்க்க முடியும். ஆனால், சமீப நாட்களாக தங்க நகை பிரியர்களை அதன் விலையானது கலங்கடித்து வருகிறது.

தங்கம் விலையில் புது உச்சம்
போகிற போக்கை பார்த்தால் தங்கத்தை இனி கனவில்தான் வாங்க முடியுமோ என நினைக்கும் அளவுக்கு விலையானது உச்சம் தொட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ரூ. 57,200 ஆக இருந்த தங்கம் விலை 8 மாதங்களில் சுமார் 18 ஆயிரம் விலை உயர்ந்து அதிர வைத்து இருக்கிறது. தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது சர்வதேச அளவில் காணப்படும் போர்ப் பதற்றம், டிரம்ப் நடத்தும் வரி யுத்தம் போன்றவற்றால் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த 8 ஆம் தேதி இதுவரை இல்லாத புதிய உச்சமாக சவரன் ரூ.75,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரத்தில் தங்கம் விலையானது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இன்றைய ரேட் என்ன?
இது நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.74,200 ஆக விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று விலை எப்படி இருக்கும். குறைய வாய்ப்பு உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டது.
ஆனால் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றையை விலைக்கே விற்பனை ஆகின்றது. ஒரு சவரன் இன்று ரூ.74,200-க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிராம் ரூ.9275க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையிலும் எந்த வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி சென்னையில் ரூ.127-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை:
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (இன்று)
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200 (நேற்று)
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240.












Click it and Unblock the Notifications