வெறும் 180 நாட்களில் 30 கிலோ எடை குறைத்த இன்ஸ்டா பிரபலம்.. "இந்த" மூன்று விஷயம் செய்தாலே போதுமாம்!
மும்பை: எடை இழப்பு என்பது கடினமான ஒன்று என்றாலும் முடியாத காரியம் இல்லை. சரியான விஷயங்களைப் பின்பற்றினால் உடல் எடையை மளமளவெனக் குறைக்கலாம். இந்த கடினமான எடை இழப்பு பயணத்தை 24 வயதே ஆன சோனியா சாதித்துள்ளாள். அவர் எப்படி இதைச் செய்தார் என்பதைத் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் விளக்கியுள்ளார். அது குறித்த நாம் பார்க்கலாம்.
24 வயதே ஆன சோனியா என்ற பெண் ஆறு மாதங்களில், அதாவது 180 நாட்களில் உடல் எடையைக் குறைத்திருக்கிறார். இவர் ஏதோ ஓரிரு கிலோ எடை மட்டும் குறைக்கவில்லை. மாறாக ஆறு மாதத்தில் அவர் 30 கிலோ எடையை குறைத்துள்ளார்.

எடை இழப்பு பயணம்:
தனது எடை இழப்பு பயணத்தை அவர் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். வழக்கமாகச் செய்யும் உடற்பயிற்சி உடன் சரியான டயட்டையும் அவர் பின்பற்றி வந்ததே எடை இழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. சோனியா தனது இன்ஸ்டாகிராமில் எடை இழப்பு பயணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கூடுதலாகக் கஷ்டம்:
பொதுவாகவே வெளிநாடுகளைக் காட்டிலும் நமது நாட்டில் எடை இழப்பு என்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் இந்திய உணவுகளில், அது சாதமாக இருந்தாலும் சரி, சப்பாத்தியாக இருந்தாலும் சரி, பொதுவாகவே கலோரிக்கள் அதிகமாகவே இருக்கும். எனவே, நாம் இந்திய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடலில் கலோரி அளவு அதிகரிக்கிறது. இதனால் எடை குறைப்பு என்பது நமது நாட்டில் வழக்கத்தை விடக் கூடுதல் கடினமானதாக மாறுகிறது.
சோனியா பாரம்பரிய இந்திய உணவுகளைச் சாப்பிட்ட அதேநேரம் கலோரிக்களையும் குறைத்துள்ளார். இதன் மூலமே அவரால் குறுகிய காலத்தில் எளிதாக எடை குறைக்க முடிந்துள்ளது. தான் எப்படி எடை குறைப்பு பயணத்தை மேற்கொண்டேன் என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார்.
என்ன செய்யலாம்:
அதாவது சோனியா எப்போதும் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்துக் கொள்வாராம். இதன் மூலம் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பே வயிறு ஓரளவுக்கு நிரம்பி இருக்கும். அடுத்துச் சாப்பிடவும் கூட அவர் சிறிய சைஸ் தட்டை தான் பயன்படுத்துவாராம். இதுவும் குறைவாகச் சாப்பிட உதவுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், உணவில் எப்போதுமே பாதி காய்கறிகள் தான் இருக்குமாம். அதேபோல 25% புரதச்சத்து நிறைந்த உணவுகளான சன்னா, பருப்பு அல்லது சோயாபீன்களால் இருக்கும். மீதமுள்ள கால் பகுதி மட்டுமே ஆரோக்கியமான கொழுப்புகளான நெய் மற்றும் ரொட்டி அல்லது அரிசி போன்ற கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
எடை இழப்பு பயணத்தில் தினசரி என்ன செய்வார்:
காலை எழுந்தது முதல் என்ன செய்வேன் என்பதையும் அவர் மற்றொரு வீடியோவில் விளக்கியிருக்கிறார்.
- காலை: அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்கும் சோனியா, தினசரி ரன்னிங் போவாராம். மேலும், தேவையான அளவுக்குத் தண்ணீரும் குடித்துக் கொள்வார்.
- ஒர்க் அவுட்டிற்கு பிறகு: சத்தான அளவான உணவை எடுத்துக் கொள்வார்.
- தண்ணீர்: தினசரி 3 முதல் 4 லிட்டர் தண்ணீரைக் குடிப்பாராம். அதுவும் ஒரே நேரத்தில் அதிகப்படியான நீரைக் குடிக்க மாட்டார். நாள் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக 3 முதல் 4 லிட்டர் நீரைக் குடிப்பார்.
- மாலை: வீட்டிலேயே முழு கார்டியோ பயிற்சிகள்.
இரவு உணவு: சூப், சிக்கன் (செஸ்ட் பகுதி), பன்னீர் மற்றும் முட்டை போன்ற உணவுகளைக் கொண்ட உணவு. இதையடுத்து அவர் காய்கறிகள் உடனே எடுத்துக் கொள்கிறார். டின்னருக்கு பிறகு நடைப்பயிற்சியும் அவர் செய்கிறார்.
மூன்று விஷயம் முக்கியம்:
எடை இழப்பு என்பது கடினம் தான் என்றாலும் முடியாத காரியம் இல்லை என்கிறார் சோனியா. இதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமானதாம். முதலில் துரித உணவுகளை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும். அடுத்து வாழ்க்கை முறையை ஹெல்த்தியாக மாற்ற வேண்டும். கடைசியாகத் தினசரி ஒர்க்அவுட் செய்ய வேண்டும். இதை எல்லாம் சரிவரச் செய்தாலே போதும் எடை தானாகக் குறைந்துவிடும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications