அடர்த்தியான தலைமுடிக்கு.. இந்த 5 போதுமே.. தலைமுடி கிடுகிடுன்னு எப்படி வளரும் பாருங்க.. ஜஸ்ட் ட்ரை
சென்னை: தலைமுடி வலுவிழந்து காணப்பட்டாலோ அல்லது அதிகமாக கொட்டினாலோ இரும்புச்சத்துக்கள் உடலில் குறைவாக உள்ளதே பிரதான காரணமாகும். இதற்கு 3 வகையான ஜூஸ்களை குடித்து வரும்போது, ஓரளவு பலன்கிடைக்கும்.
இரும்புச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும்.. ஜிங்க் சத்து குறைவாக இருந்தால், தலைமுடி வலுவாக இல்லாமல் இருக்கும். புரோட்டீன் குறைவாக இருந்தால், தலைமுடியின் செல்களின் வளர்ச்சியை பாதிக்கும்.. வைட்டமின் D குறைவாக இருந்தால், முடியின் வளர்ச்சியை தடைபடுத்திவிடும்.

அதேபோல, வைட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடும்போது, அது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.. வைட்டமின் B நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, முடிவளர்ச்சி அதிகமாகிறது.. வைட்டமின் E நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகிறது. இவைகளுடன் சேர்த்து ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் தேவைப்படுகின்றன.
அதனால்தான், வைட்டமின் C, B, E உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் நம்முடைய உணவுகளில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்..
இதற்கு 3 வகையான ஜூஸ்களை அல்லது சூப்களை செய்து சாப்பிட்டால் ஓரளவு தீர்வு கிடைக்கும். இதில் முதன்மையானது, முருங்கைக்கீரையாகும்.. வழக்கமான கீரைகளைவிட, சற்று அதிகம் இரும்புச்சத்து நிறைந்த கீரையாகும்.
முருங்கைக்கீரை: முருங்கையிலையை கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கை கீரையின் ஈர்க்குச்சிகளை மட்டுமே வைத்து சூப் தயாரித்து குடிக்கலாம்..
பாலக்கீரை: அதேபோல, பசலைக்கீரை ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.. பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் C, கரோட்டினாய்டுகள், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.. இந்த கீரையை அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து வடிக்கட்டி குடிக்கலாம்... அல்லது எந்த பழத்தில் ஜூஸ் தயாரித்தாலும், அதில் இந்த பசலைக்கீரையை சேர்த்து அரைத்து குடிக்கலாம். சமையலிலும் இந்த கீரையை வாரம் 2 முறையாவது பயன்படுத்த வேண்டும்.
நெல்லிக்காய்: அடுத்ததாக, நெல்லிக்காய் ஜூஸ் செய்து சாப்பிடலாம்.. ஜூஸாக இல்லாவிட்டாலும், வெறுமனே நெல்லிக்காயை தினமும் சாப்பிடலாம். வைட்டமின் C நிறைந்த இந்த காய்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் தன்மைகள் நிறைந்தவை.. அத்துடன், புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.. அதைவிட முக்கியமாக, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.
அதேபோல, கற்றாழை ஜூஸ் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. 20 மில்லி கற்றாழை ஜெல்லை, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். துளசி, நெல்லிக்காய்களையும், கற்றாழையோடு கலந்து குடிக்கலாம்.
வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றிலும் ஜூஸ் தயாரித்து, எலுமிச்சையை கலந்து குடிக்கலாம்.. இதிலுள்ள வைட்டமின் A. முடி வேகமாக வளர செய்து, முடியை வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது..
கறிவேப்பிலை: எந்த சமையல் செய்தாலும், எந்த வகையான ஜூஸ் செய்தாலும், எந்த வகையான சூப் செய்தாலும், அவைகளிளெல்லாம் கறிவேப்பிலையை சேர்த்து கொள்வது மிகவும் நன்மை தரும்.. காரணம், கறிவேப்பிலையை எந்த ரூபத்தில் சாப்பிட்டாலும், அத்தனையும் பலன் தரும்..!!












Click it and Unblock the Notifications