டேஸ்டா சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு.. உடல் எடை குறைந்தும் போச்சு! இந்த 5 ஷேக்குகளை ட்ரை பண்ணுங்க
சென்னை: உடல் எடை அதிகரிப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்களின் பிரச்சனையாக மாறி இருக்கும் நிலையில் 5 ஷேக்குகளை குடிப்பதன் மூலம் அது குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த 5 ஷேக்குகள் என்ன? விரிவாக பார்ப்போம்.
மாறி வரும் உணவு பழக்க வழக்கம் காரணமாக உடல் எடை அதிகரிப்பு என்பது பெரிய பிரச்சனையாக மக்கள் மத்தியில் உருவெடுத்து உள்ளது. உடல் எடை அதிகரிப்பாக உடல் நலன் சார்ந்த குறைபாடுகள், சோம்பல்தனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுடன் மன ரீதியிலான சிக்கல்களும் எழுகின்றன.

குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் உடல் எடை குறித்து எழுப்பும் கேள்விகள், உருவ கேலிகள் போன்றவற்ற மன ரீதியிலும் பிரச்சனைகள் வருகின்றன. எனவே உடல் எடையை குறைப்பதற்காக மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். நடைபயிற்சி, ஜாக்கிங், உடற்பயிற்சி, டயட் என பல விசயங்களை செய்து வருகிறார்கள்.
இந்த பிரச்சனை காரணமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை உடற்பயிற்சி கூடங்கள் தொடங்கப்பட்டு கல்லா கட்டி வருகிறார்கள். அதேபோல் எளிதில் உடல் எடையை குறைக்க சிலர் ஆபத்தான மருந்துகளை எடுத்துக்கொண்டு, பல்வேறு பின் விளைவுகளையும் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் கோடையின் வெப்பத்தை சமாளிக்கவும், எளிதில் உடல் எடையை குறைக்கவும் உதவும் 5 வகையான ஷேக்குகளை பார்ப்போம்.
சாக்லேட் பாதாம் ஷேக்: அதில் முதலாவதான சாக்லேட் பாதாம் ஷேக் பற்றி பார்ப்போம். மாவு சத்துடைய உணவு பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதை விட இந்த சாக்லேட் பாதாம் ஷேக்கை அருந்துவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
காபி கிராம்பு ஷேக்: காபி தூளுடன் தேவையான அளவு கிராம்பையும் சேர்த்து பாலில் அடித்து குடிக்கும்போது வரும் மனமும் சுவையும் தனி ரகம். இந்த கோடை காலத்தில் நாம் எளிதில் சோர்வாகிவிடும் சூழலில் இதில் உள்ள புரத சத்துக்கள், இயற்கை சர்க்கரை, கஃபைன் போன்றவை நம்ம பல மணி நேரம் சோர்வடையாமல் வைத்திருக்கும்.
ஓட்ஸ் ஷேக்: காலை உணவுக்கு பதிலாக இதை எடுத்துக்கொள்ளலாம். இதுவும் நம்மை பல மணி நேரம் சோர்வடையாமல் வைத்து இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதயத்துக்கும் ஓட்ஸ் ஷேக் நல்லது என்று சொல்கிறார்கள்.
ஆப்பிள் ஸ்மூதி: ஃபைபர், வைடமின் சி, ஆண்டி ஆக்சிடன்கள் நிரம்பிய இந்த பானமும் மிகவும் பயனளிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடலில் உள்ள கொலஸ்டிராலை குறைக்கும் ஆப்பிள், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

பாதாம் பட்டர் ஷேக்: பாதாம் மற்றும் நெய்யை அடித்து செய்யப்படும் இந்த பானம் தயாரிப்பது சுலபம். மதிய உணவுகளுக்கு மாற்றாக கூறப்படும் இந்த சுவையான பானம், உடலுக்கு அதிக சத்து தரக்கூடியது. ஒரு முழு வாழைப்பழம், ஒரு கப் பாதாம் பால், ஒரு ஸ்பூன் பாதாம் நெய், ஒரு ஸ்பூட் சியா விதைகளை கொண்டு இதை தயாரிக்கலாம்,
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications