ஆட்டிறைச்சியை தவிர்க்காதீங்க.. மட்டனை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா? இந்த சூப்பர் உணவை நோட் பண்ணுங்க
சென்னை: கர்ப்பிணிகள் மிகவும் கவனத்துடன் சாப்பாட்டு விஷயத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில், போலிக் அசிட், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை கட்டாயம் தேவை.. இதில், புரதம் தவிர்க்க முடியாதவை.. தசைகள், தோல், எலும்புகளின் கட்டமைப்பை பராமரிப்பது முதல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்வது வரை, இந்த புரதத்தின் பங்கு அபரிமிதமானது..

எனவே, கர்ப்பிணிகள் புரோட்டினை சாப்பிடுவது, குழந்தையின் வளர்ச்சிக்கு பேருதவி புரியும். இதில் முதன்மையானது, கோழி முட்டை. முட்டையின் வெள்ளைக்கருவில் நிறைய கால்சியம் சத்துக்களும் உள்ளதால், வயிற்றிலுள்ள கரு, தாயின் ஆரோக்கியம் போன்றவற்றிற்கு முட்டை குறிப்பாக, முட்டையின் வெள்ளைக்கரு துணைபுரிகிறது. காய்கறிகள், கீரை, பனீர் போன்றவற்றிலும், புரதச்சத்து நிறைய உள்ளது..
புரோட்டீன்கள்: தினமும், உணவில் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் போன்றவை கட்டாயம் இடம் பெறும்படி பார்த்து கொள்ள வேண்டும். குறைந்தது தினமும் 3 லிட்டர் அளவுள்ள திரவ உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.. பொதுவாகவே கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு.. எனவே, மலச்சிக்கல் வராத வண்ணம், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்வது நல்லது.. குறிப்பாக, முருங்கை, முள்ளங்கியை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
பப்பாளி, அன்னாசி பழங்கள் இரண்டுமே உடல்சூட்டை தந்துவிடும் என்பதால், இவைகளை மட்டும் குறைவாக எடுத்து கொண்டு, மற்ற பழங்களை தாராளமாகவே சாப்பிடலாம். ஊறவைத்த கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம்.
கர்ப்பமாக இருப்பதாலேயே அசைவத்தை சிலர் தவிர்த்துவிடுவார்கள்.. உடலுக்கு அலர்ஜியோ, வேறு தொந்தரவோ எதுவும் இல்லாவிட்டால், டாக்டர்களின் ஆலோசனையுடன் அசைவ உணவுகளை எடுத்து கொள்ளலாம்... குறிப்பாக, கோழி, சிறிய வகை மீன், முட்டையை குறைந்த அளவு சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள்: சமீபத்தில், கர்ப்பிணிகளை கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், கர்ப்பிணி பெண்களுக்கு பிடித்த உணவுகள் என்று ஒரு லிஸ்ட் வெளியிடப்பட்டது.. இதில், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்கொள்ளக் கூடிய உணவில், சிக்கன் இடம்பெற்றிருந்தது.. புரோட்டீன் ஆதாரம் உள்ளது என்றாலும், அதிக காரம் உள்ள சிக்கன் உணவுகளை தவிர்க்க சொல்கிறார்கள்.

ஆட்டுக்கறி: மட்டனிலும் புரோட்டீன்கள், வைட்டமின்கள் நிறைய உள்ளதால், ஆரோக்கியமான உணவாக மட்டன் உள்ளது. குறைந்த அளவிலான சிக்கன், மட்டன், மாட்டிறைச்சியும் நல்லதுதானாம்.. ஆனால், இந்த அசைவ உணவுகள் நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும்..
கர்ப்பிணிகள் மீன்களை குறைந்த அளவு சாப்பிடலாம்.. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.. இதய பராமரிப்பிற்கு உதவுகிறது.. அத்துடன், குறை பிரசவ வாய்ப்பையும் குறைக்கிறது. எனவே, பாதரசம் அதிகம் இல்லாத மீன்கள், குறிப்பாக, சால்மன் மீன், நெத்திலி, மத்தி மீன்களை சாப்பிடலாம்.
பானங்கள்: தினமும் ஒரு கப் டீ அல்லது ஒரு கப் காபி எடுத்து கொண்டால் நல்லது.. மற்ற நேரங்களில், காய்கறி சூப், அசைவ உணவில் சமைக்கப்பட்ட சூப்களை குடிக்கலாம்.. காரணம், இந்த சூப்களில் ஆக்சிஜனேற்றிகள் நிரம்பியுள்ளதால், அஜீரணமாக வாய்ப்பில்லை.. சூப்கள் எப்போதுமே ஆரோக்கியமானதும்கூட.
தவிர்க்க வேண்டிய உணவு: காரம், எண்ணெய் அதிகம் இல்லாத உணவு வகைகளை சமைத்து சாப்பிட வேண்டும். கோதுமை, மைதாவை தவிர்க்கலாம்.. அதிக சர்க்கரை அளவுள்ள உணவுகள், கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை தவிர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், பச்சை முட்டை, மீன் வகைகளையும் தவிர்த்து விடலாம். பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பால், சீஸ் மற்றும் பழ ஜூஸ், வேகவைக்காத முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றையும் தவிர்த்துவிடலாம்.
கர்ப்பிணிகளை பொறுத்தவரை, சாப்பிடும் ஒவ்வொரு உணவும் முக்கியம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையின்றி எதையுமே சாப்பிடக்கூடாது..!!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications