6 x 6 x 6 ஈஸியான வாக்கிங் விதி.. நடைபயிற்சியால் இத்தனை நன்மைகளா? தினமும் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்கணும்?
சென்னை: நடைபயிற்சி செய்வதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது என்றும் தமனிகளின் ஆரோக்கியம் காக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வளவு தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் அந்த ஆய்வில் விரிவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி என்பது மிக எளிமையானது.. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கையை வீசி நடக்கலாம்.. வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் என யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்..

மனச்சோர்வு, சோர்வை நீக்குதல், மனநிலையை மேம்படுத்துதல், மூட்டுகளில் குறைந்த அழுத்தத்தை உருவாக்குதல், எடை அதிகரித்தலை தடுத்தல், புற்றுநோய் ஆபத்தை குறைத்தல் இப்படி பல நன்மைகளை நடைபயிற்சி மூலம் கிடைக்கின்றன.
நன்மைகள்: அதேபோல, ஒவ்வொரு வயதினரும், குறிப்பிட்ட அடிகள் நடக்க வேண்டும்.. சமீப காலமாக நடைபயிற்சியில் "6-6-6 விதி" பிரபலமாகி உள்ளது. அதாவது, காலை 6 மணிக்கும், சாயங்காலம் 6 மணிக்கு 60 நிமிட நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். 6 நிமிட வார்ம்-அப், 6 நிமிடம் கூல்-டவுன், இவையெல்லாம் சேர்ந்துதான் 6-6-6 ரூல் என்கிறார்கள்.
அதாவது, காலையில் 6 மணிக்கு வாக்கிங் செய்தால், நாள் முழுவதும் ஆற்றல் புத்துணர்வு கிடைக்கும். மாலையில் 6 மணிக்கு வாக்கிங் செய்தால் வேலை அழுத்தத்தை தணித்து, உடலை இலகுவாக மாற்றும். 6 நிமிட வார்ம்-அப் மற்றும் கூல்-டவுன் செய்வது, உடலை காயத்திலிருந்து பாதுகாத்து மீட்கும்.
666 ரூல்: 60 நிமிடம் நடைபயிற்சி மேற்கொண்டால், உடலில் கொழுப்பு கரைவதுடன், நுரையீரலும் பலம் பெறும்.. வாரத்திற்கு 60 நிமிடம் வாக்கிங் செய்தால், தசைகள் வலுப்பெறும். மொத்தத்தில், வாரத்திற்கு 5 முறை 60 நிமிடம் நடைபயிற்சி செய்தாலே, நீண்ட காலத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்ள முடிவதுடன், உடல் எடை குறைந்து, ஆரோக்கியம் தழைக்கும் என்கிறார்கள்.
இந்நிலையில், ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA)-ல் நடைபயிற்சி குறித்த ஆய்வு முடிவு வெளியாகியிருக்கிறது.. அந்த ஆய்வில், நடைபயிற்சி மூலம் 72 சதவீதம் பேருக்கு பல்வேறு நோய்களின் அபாயம் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடல் கொழுப்பு: அந்த ஆய்வில் மேலும் சொல்லப்பட்டுள்ளதாவது: "வாக்கில் செல்வதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது, தமனிகளின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. வாக்கிங் செய்யாவிட்டால், உணவு ஆற்றல் உடல் கொழுப்பில் அதிகமாக குவிந்து கொண்டே செல்லும்.. இதன்காரணமாக உடல் பருமன், சர்க்கரை நோய், இதய பிரச்சினைகள் போன்ற ஆபாயங்களுக்கு வழிவகுத்துவிடும்.
எப்போதுமே வாக்கிங் செய்யும்போது வேகமாக நடப்பதுதான் நல்லது. நடையின் வேகத்தை அதிகரிப்பதைவிட, அதிக தூரம் நடப்பதுதான் முக்கியம்.. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாரத்திற்கு 3 முதல் 7 முறை 8,000 அடிகள் நடப்பது, மரணத்தை தள்ளிப்போடும்" என்றெல்லாம் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
6,000 முதல் 10,000 அடி: சமீபத்தில் நடந்த ஒரு ஆய்விலும் இதேபோன்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, ஒருவர் ஒருநாளைக்கு 2,337 அடிகள் நடந்தால், இதய நோய் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் ஏற்படாது.. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications