அரசு மருத்​து​வ​மனை​யில் தவெக எம்எல்ஏ ஆய்வு.. இப்போது எங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது பாருங்க

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்​துக்​குடி ஏரல் அரசு மருத்​து​வ​மனை​யில் ஸ்ரீவை​குண்​டம் தவெக எம்​எல்ஏ சரவணன் ஆய்வு செய்தார். அப்போது ஓய்வில் இருந்த மருத்​து​வரை எழுப்பி, வரவழைத்து, 24 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய பணி உங்களுடையது. இதுபோன்ற பணியில் மருத்​து​வர் உரிய நேரத்தில் இல்​லாமல் இருந்​தால் நோயாளி​களுக்கு எப்​படி சிகிச்சை அளிக்க முடி​யும் என்று கேள்வி எழுப்​பினார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. 24 மணி நேர பணியை ரத்து செய்துவிட்டு மருத்துவர்களுக்கு ஷிப்ட் முறை கொண்டுவர வேண்டும் என்று அரசு மருத்​து​வர்​கள், பட்​ட மேற்​படிப்பு மாணவர்​கள் சங்​கம் குரல் எழுப்பி உள்ளது.

அரசு மருத்​து​வர்​கள், பட்​ட மேற்​படிப்பு மாணவர்​கள் சங்​கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், " 24 மணி நேர பணி குறித்து தமிழக சுகா​தா​ரத்​துறை எந்த அரசாணை​யும் வெளி​யிட​வில்​லை. தூத்​துக்​குடி ஏரல் அரசு மருத்​து​வ​மனை​யில் தனது பணி அறை​யில் தங்கியிருந்​த​போது, வந்த செவிலியரின் தொலைபேசி அழைப்​பை​ ஏற்று மருத்​து​வர் வந்துள்ளார். நோயாளி எவரும் இல்​லாத​தால் அவருடைய பணி அறையை மூடி உள்​பக்​கம் தாழிட்டு ஓய்​வில் இருந்தார். அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​களுக்கு உள்ள 24 மணி நேர பணி முறையை ரத்து செய்து, உடனடி​யாக ஷிப்ட் முறையை கொண்டுவர வேண்​டும்.

TVK MLA inspects government hospital urges implementation of a shift system for doctors

ஏரல் அரசு மருத்​து​வ​மனை​யில் 24 மணி நேர பணி​யில் இருந்த மருத்​து​வரை, பொது​வெளி​யில் குற்​றம்​சாட்​டும் வகை​யில் மக்​கள் பிர​தி​நிதி ஒரு​வரே தவறாக சித்​தரித்த சம்​பவம் கண்​டிக்​கத்​தக்​கது. அவசரநிலைகளில் பணி மருத்​து​வர் உடனடி​யாக பணிக்கு வரத் தயா​ராக இருக்​கும் நிலை​யில், ஒதுக்​கப்​பட்ட பணி​யாளர் ஓய்வு அறை​யில் ஓய்​வெடுப்​பது அலட்​சி​யம் அல்ல. அதனால், மருத்​து​வர்​களுக்கு ஷிப்ட் பணியை நடை​முறைப்​படுத்த தகுந்த வழி​காட்​டு​தல்களை வழங்க வேண்​டும்.

அரசாணை 113-ல் குறை​பாடு: அரசு மருத்​து​வர்​கள் மற்​றும் பட்​டமேற்​படிப்பு மாணவர்​கள் சங்​கத்​தினர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், "மருத்​துவ சேவை​கள் இயக்​குநரகத்​தின் (டிஎம்​எஸ்) கீழ் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​காமல், மருத்​து​வர்​களை மாற்று நிர​வல் செய்​யும் வகை​யில் அரசாணை 113 வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதனால், 70 சதவீத அரசு மருத்​து​வ​மனை​களில், அனு​ம​திக்​கப்​பட்ட மருத்​து​வர் பணி​யிடங்​கள் குறைக்​கப்​பட்​டுள்​ளன. நோயாளி​களின் எண்​ணிக்கை, சிறப்பு சேவை​களின் அடிப்​படை​யில் புதிய பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​படும் என சுகா​தா​ரத் துறை அமைச்​சர் உறு​தி​யளித்​தும் நிறைவேற்​ற​வில்​லை. தமிழக முதல்​வர் மற்​றும் சுகா​தா​ரத் துறை அமைச்​சர் இதில் உடனடி​யாகத் தலை​யிட்டு அரசாணை 113-ல் உள்ள குறை​பாடு​களைச் சரிசெய்ய வேண்​டும்​" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணன் நள்ளிரவில் ஆய்வு நடத்தினார். அங்கு மருத்துவர் தனது அறையில் உள்ளே தூங்கி கொண்டிருந்தார். அவரை செவிலயரின் செல்போன் மூலம் அழைத்து, வெளியே வரவைத்த அன்னை சரவணன், அவருக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றார். இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கருத்துக்களை தெரிவித்தனர்.

நெட்டிசன்கள் அப்போது வெளியிட்ட பதிவில், "பணியில் இருக்கும் மருத்துவர் மருத்துவமனையின் இரவுக்காவலர் அல்ல. நோயாளிகள் யாரும் காத்திருக்கவில்லை என்றால், அவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருப்பார். நோயாளி ஒருவர் வரும்போது, ​​செவிலியரோ அல்லது பிற பணியாளர்களோ கதவைத் தட்டியோ அல்லது அழைத்தோ அவரை எழுப்புவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. தயவுசெய்து இந்த சட்டமன்ற உறுப்பினரிடம் இதைத் தெரிவியுங்கள்" என்று கூறியிருந்தார்கள்.

திமுக முன்னாள் எம்பி செந்தில்குமார் வெளியிட்ட பதிவில், "கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இரவுப் பணியில் உள்ள மருத்துவரின் பணி மற்றும் பொறுப்புகளில் டி.வி.கே எம்.எல்.ஏ தலையிட்டது முற்றிலும் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசியல் தலையீட்டிற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பிற மருத்துவர் சங்கங்கள் வலுவான அறிக்கையை வெளியிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இதையடுத்து அரசுமருத்துவர்கள் சங்கமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+