பிக் பாஸ் வந்த டிடிஎஃப் வாசன்.. நண்பனை அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி! இப்படி பேசியது சரியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளராக டிடிஎஃப் வாசனும் வந்திருக்கிறார். அவருக்காக அவருடைய நண்பர் வந்திருந்த நிலையில் அவரிடம் விஜய் சேதுபதி நோஸ்கட் பண்ணுவது போலவே பேசி இருக்கிறார்கள். இது சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே விஜய் சேதுபதி இதற்கு முன்பு இருந்த கமல்ஹாசன் போல போட்டியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று முழுமையாக கேட்காமல் தான் நினைத்ததை தான் போட்டியாளர்கள் பேச வேண்டும் என்பது போலத்தான் நடந்து கொள்கிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. போட்டியாளர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று முழுமையாக கேட்காமல் அவர்களை பாதியிலேயே உட்கார சொல்வது, அல்லது அவர்களின் நோஸ்கட் பண்ணுவது போலவே பேசுவது போன்றவற்றை தான் விஜய் சேதுபதி செய்து கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் அப்டேட்
ஆனால் இதுவரைக்கும் போட்டியாளர்களிடம் இப்படியே பண்ணி விஜய் சேதுபதிக்கு பழகிவிட்டது போல, இப்போ போட்டியாளர்களின் உறவினர்களிடமும் இதே வேலையை விஜய் சேதுபதி காட்டத் தொடங்கி விட்டார் என்று ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே கடந்த சீசனில் நடிகர் ரஞ்சித் கலந்து கொண்ட போது அவருடைய நண்பர்கள் பேசும் போதும் மேடையிலேயே நோஸ்கட் பண்ணி இருந்தார். அதேபோல இப்போது டிடிஎஃப் வாசனின் நண்பரையும் பேசவிடாமலேயே விஜய் சேதுபதி நோஸ்கட் பண்ணி இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் பேச்சு
அதாவது விஜய் சேதுபதி மேடைக்கு அழைத்ததும் அவருடைய நண்பரிடம், உங்க நண்பர் இந்த நிகழ்ச்சியில் எப்படி விளையாடுவார் என்று நினைக்கிறீங்க? அவருக்கு என்ன அட்வைஸ் கொடுக்குறீங்க என்று கேட்டிருந்தார். அதற்கு வாசனின் நண்பர் நட்பு பற்றி பேச தொடங்கினார் உடனே விஜய் சேதுபதி அதை இடைமறித்து விட்டார். பிறகு அந்த நபர் பேசிய எதையும் முற்றுப்பெறவிடாமல் இடை இடையே பேசிக்கொண்டே இருந்தார். அது மட்டுமில்லாமல் டிடிஎஃப் வாசனிடமும் அதுபோலத்தான் பேசிக் கொண்டிருந்தார்.

டிடிஎஃப் வாசன் பிக் பாஸ் விளையாட்டு
கடைசியாக வாசன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க தைரியமாக பேசுவீங்க அதேபோல இந்த வீட்டுக்குள்ளே போய் விளையாடுங்க என்று அனுப்பி வைத்திருந்தார். ஆனால் உள்ளே போன வாசன் முதல் நாளே தன்னுடைய விளையாட்டை போல்டாகவே தொடங்கி இருக்கிறார். நான் முதல் 10 எபிசோடு தான் பார்த்திருக்கிறேன் பிறகு பார்க்க விடாமல் போனை வாங்கி வச்சுட்டாங்க என்று வாசன் சொல்லி இருந்தார்.
அதேபோலத்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் போய் அவர் நடந்து கொண்டார் முதல் 10 எபிசோடில் நடந்த பிரச்சனைகளை பற்றி மட்டும் அங்கிருந்த போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனால் இவருடைய விளையாட்டு இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
