ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? மனஅழுத்தத்தை உடனே குறைக்கணுமா? இந்த 7 பொருட்களை சாப்பிடுங்க!
சென்னை: தற்போதைய சூழலில் பள்ளி மாணவர்கள் முதல் பணிக்கு செல்வோர் வரை வயது வித்தியாசமின்றி பலரும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றன. இதற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கும் நிலையில் இந்த 7 பொருட்களை சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் எனும் மனஅழுத்தம் குறைந்து நிம்மதி கிடைக்கும்.
‛ஸ்ட்ரெஸ்'.. சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் ஒன்றாக இருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் அனைவரும் இந்த வார்த்தை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் ஸ்ட்ரெஸ் எனும் மனஅழுத்தம் என்பது ஏறக்குறைய அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது எனலாம்.

எப்போதாவது நாம் மனஅழுத்தத்தை சந்தித்தால் பரவாயில்லை. ஆனால் எப்போதுமே மனஅழுத்தத்தில் இருப்பது என்பது நமது உடலில் பிரச்சனையை உருவாக்கலாம். இதனால் ஏதாவது ஒரு காரணம் நமக்கு மனஅழுத்தத்தை கொடுத்தால் அது பற்றி அதிகம் சிந்திக்காமல் இருப்பதே சிறந்ததாகும். இல்லாவிட்டால் மனநலம் சார்ந்த டாக்டர்களிடம் சென்று அதற்கு நாம் தீர்வு காண வேண்டும்.
ஓகே.. இது ஒருபுறம் இருக்கட்டும். மனஅழுத்தத்தை குறைக்க மேற்கூறிய வழிகள் ஒன்று என்றால் மாற்று வழிகளும் சில உள்ளன. அதாவது நமக்கு பிடித்த வேலைகளை செய்வது, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவது உள்ளிட்டவற்றில் இருந்தும் நாம் மனஅழுத்தத்தில் இருந்து எளிதில் விடுபடலாம். மேலும் சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமாகவும் நாம் ஸ்ட்ரெஸில் இருந்து தப்பிக்கலாம். அப்படியாக மனஅழுத்தத்தை குறைக்கும் 7 உணவு பொருட்கள் பற்றிய விபரம் வருமாறு:
பெரிஸ் பழங்கள்: ப்ளூபெரிஸ், ஸ்ட்ராபெரிஸ் மற்றும் ரஷ்ப்பெரிஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது மனஅழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக ப்ளூபெரிஸ் பழங்களில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடென்ஸ் உள்ளது. இது மனஅழுத்தத்தில் இருந்து நம்மை விடுப்பதுடன், கவலையை போக்கும்.
டார்க் சாக்லேட்: இரண்டாவது டார்க் சாக்லேட்டை கூறலாம். இதனை உண்பதன் மூலம் உடலில் உள்ள கோரிடிசால் (Cortisol) அளவு குறையும். இதனால் மனஅழுத்தத்தில் இருந்து நாம் விடுபடலாம். இதனால் சாக்லேட்டில்
70 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான கோக்கோ (Cocoa) கன்டென்ட் இருப்பதை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
கெமோமில் டீ: கெமோமில் டீயில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சாமந்தி பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீ இது. இதை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, உடலும் மனமும் ரிலாக்ஸாகும். மேலும் மைக்ரேன் வகை தலைவலியில் இருந்தும் நாம் விடுபடலாம். குறிப்பாக உங்களுக்கு ஸ்டெ்ரெஸ் மிகுந்த நாள் இரவில் நாம் இரவில் தூங்குவதற்கு முன்பு கெமோமில் டீ குடித்து படுப்பது நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
அவகோடா பழம்: அவகோடா பழத்தில் கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6 வகை நிரம்பி உள்ளது. இது மனஅழுத்தத்தை குறைக்கும். மேலும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும். இந்த பழங்கள் பழக்கடைகளில் கிடைக்கும். இதனால் மனஅழுத்தத்தை உணர்வோர் இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டில் சல்பர் காம்பவுண்ட்ஸ் அதிகமாக உள்ளது. இது குளுதாதியோன்(Glutathinone) அளவை அதிகரிக்கும். மேலும் இது உடலில் ஆண்டிஆக்சிடன்ட் ஆக செயல்படுவதோடு, ஸ்ட்ரெஸை குறைக்கும் முதன்மை பொருளாக இருக்கும். வெள்ளைப்பூண்டு எப்போதும் நம் வீட்டில் இருந்தாலும் கூட இதன் பலனை நாம் அறிந்து வைப்பது இல்லை. உண்மையில் இது சிறந்த மனஅழுத்த நிவாரணியாக உள்ளது.
சூர்யகாந்தி விதை: இதில் கொழுப்பில் கரையும் விட்டமின் ஈ உள்ளது. மேலும் இது சிறந்த ஆண்டி ஆக்சிடன்டாக செயல்பட்டு சிறந்த மனநிலையை பெற உதவும். அதோடு மட்டுமின்றி மனஅழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம், மாங்கனீசு, செலினியம், துத்தநாகம், வைட்டமின் பி, காப்பர் உள்ளிட்டவை உள்ளன. இதனால் ஸ்ட்ரெஸ் நிச்சயம் பறந்துவிடும்.
கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் மனஅழுத்தத்தை குறைக்கும் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, ஜிங்க், செலினியம், மாங்கனீஸ் மற்றும் காப்பர் உள்ளிட்டவை உள்ளன. மேலும் எல்-டிரிப்டோபன் நிறைந்துள்ளது. இது நமது மனநிலையை ஒழுங்குப்படுத்த பெரிதும் உதவும். மேலும் கொண்டைக்கடலையில் புரதங்கள் நிறைந்துள்ளதால் இது மூளையின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications