கல்லீரல் கல்லா போயிரும்லே.. வேணாம் குடிக்காதீங்கலே! டாக்டர் நேரடியாக காட்டிய டெமோ.. ஷாக் போட்டோ!
டெல்லி: இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நாள்தோறும் மதுகுடிப்போரின் எண்ணிக்கையும், அதனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவர் ஒருவர் மதுக் குடிப்பவர் ஒருவரின் கல்லீரலையும், ஆரோக்கியமான தனது மனைவியின் கல்லீரலையும் ஒப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
மதுப்பழக்கம் நீண்ட காலமாகவே உலக அளவில் புழக்கத்தில் இருக்கிறது. இந்தியாவில் குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி காலத்தில் இருந்தே மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரளா, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுபானங்கள் சகஜமாக கிடைப்பதால் ஒரு சில நேரங்களில் பெண்களும் பள்ளி கல்லூரி மாணவிகளும் மது குடிக்கும் புகைப்படங்கள் கூட அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை மாதத்திற்கு ஒருமுறை என குடித்து வந்தவர்கள் கூட நாள்தோறும் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். இளைஞர்களும் அதிக அளவில் மது பழக்கத்திற்கு அடிமையாகி விபத்து, உடல்நலக் கோளாறு உள்ளிட்டவற்றால் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மது விற்பனையும் ஒரு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
சமூக பிரச்சினைகள் மட்டுமல்லாது தனிமனித உடல் நலனிலும் மது அதிக அளவில் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கல்லீரல், இதயம், சிறுநீரகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித உடல் அமைப்பையே சிதைக்கும் அளவுக்கு மதுவால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. குறிப்பாக கல்லீரல் மது குடிப்பவர்களால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
மதுவால் உடலில் உள்ள பல உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. முதலில் மதுவால் பாதிக்கப்படுவது கல்லீரல் தான். ஆரம்பத்தில் கல்லீரல் சிறிது சிறிதாக செயலிழக்க தொடங்கி தொடர்ந்து கல்லீரலில் கொழுப்பு தேங்கி ஃபேட்டி லிவர் பிரச்சினை ஏற்படும். தொடர்ந்து ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ், ஆல்கஹால் சிரோசிஸ் உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்படுத்துகிறது இதை கவனிக்காமல் விட்டால் இறுதியில் மரணம் தான்.
இந்த நிலையில் மதுவால் கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர் ஒருவர் தெளிவாக விளக்கியுள்ளார். வாரத்திற்கு ஒருமுறை குடிக்கிறேன் எனக் கூறப்படும் சோசியல் டிரிங்கர் ஒருவரின் கல்லீரலின் புகைப்படத்தையும் தனது ஆரோக்கியமான மனைவியின் கல்லீரலின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். மது குடிப்பவர் கல்லீரல் காய்ந்து போன ரப்பர் போல, கருப்பாகவும் இறுக்கமாகவும் காணப்படுகிறது. அதே நேரத்தில் அவரது மனைவியின் கல்லீரலோ பிங்க் நிறத்தில் உள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே மதுவை இத்தோடு நிறுத்தி விடுவது நலம் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications