உணவை குடியுங்கள் தண்ணீரை மெல்லுங்கள்.. வெயிட் லாஸுக்கு மாதவனின் அல்டிமேட் ஐடியா? அதெப்படி?
சென்னை: 21 நாட்களில் உடற்பயிற்சி இல்லாமல் ஜாக்கிங் இல்லாமல் ஒல்லியாவது சாத்தியமா என்ற கேள்விக்கு நடிகர் மாதவன் விளக்கியுள்ளார். 21 நாட்களில் அவர் தனது உடலை எப்படி குறைத்தார் என்பது குறித்தும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடித்த ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற படம் வெளியானது. இது கேரள விஞ்ஞானி நம்பி நாராயணனின் நிஜ வாழ்க்கையை மையமாக எடுத்து இயக்கப்பட்டது.

இந்த படத்தை மாதவனே நடித்து அவரே இயக்கியும் இருந்தார். சுமார் 25 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பரவலாக நிறைய பேருக்கு பிடித்திருந்தது. இதில் விஞ்ஞானி நம்பியாக நடித்த மாதவன் வயதான தோற்றத்திற்காக தனது உடல் எடையை கூட்ட வேண்டிய தேவை இருந்தது.
அதிலும் ஒரே படத்தில் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் காண்பித்துள்ளார். இதுகுறித்து ஒரு சேனலுக்கு பேசிய மாதவன், எடையை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் அதை விரைவாக குறைப்பது என்பதை கண்டறிய நான் நிறைய ஆராய்ச்சிகளை செய்தேன். இந்த ஆராய்ச்சி என்னை அப்ளைடு கினீசியாலஜி எனப்படும் சோதனைக்கு அழைத்து சென்றது.
உடல் எடையை கூட்டுவதற்காக நான் 3 வேளையும் கேக் சாப்பிட்டேன். அது போல் உடல் எடையும் அதிகரித்தது. அதன் பிறகு உடலுக்கு எது நன்மையை கொடுக்குமோ அந்த உணவை மட்டும் நான் எடுத்துக் கொண்டு உடல் எடையை குறைத்தேன். இதற்காக நான் உடற்பயிற்சி செய்யவில்லை, ஜாக்கிங் செய்யவில்லை, எந்த வித அறுவை சிகிச்சையும் செய்யவில்லை.
அதுவும் வெறும் 21 நாட்களில் குறைத்தேன். உடலுக்கு பிடிக்காத உணவு எது, உங்கள் உடல் ஒப்புக் கொண்டது எது என்பதை அறிவதுதான் அப்ளைடு கினீசியாலஜி ஆகும். நான் ஏதோ டாக்டர் ரேஞ்சுக்கு பேசுவதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்து குண்டாக இருந்த புகைப்படத்தையும் ஒல்லியாக இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார்.
இந்த பேட்டியை கேட்ட நெட்டிசன்கள் எல்லாம் ஷாக் ஆகிவிட்டனர். அது எப்படி உடல் உழைப்பில்லாமல் எடை குறையும். ஒரு வேளை சர்ஜரி செய்திருப்பாரோ என நினைத்தால் அதையும் அவர் செய்யவில்லை என சொல்லிவிட்டாரே, பிறகு எப்படித்தான் உடல் எடையை குறைத்திருப்பார் என நாம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த பேட்டியை பார்த்த ஒரு நெட்டிசன்கள் அதெப்படி திமிங்கலம் என்ற ரேஞ்சுக்கு தனது சந்தேகத்தை கேட்டுள்ளார்.
மாதவனின் பேட்டியை எடுத்து போட்ட அந்த நெட்டிசன், " உடற்பயிற்சி இல்லை, ஜாக்கிங் இல்லை, 21 நாட்களில் மாதவன் உடலில் மாற்றம், அது எப்படி சாத்தியம்" என கேட்டிருந்தார். இதற்கு மாதவன் பதிலளித்துள்ளர். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இடையிடையே எதையும் சாப்பிடக் கூடாது.
உணவை நன்றாக மென்று உண்ண வேண்டும். அதாவது 45 முதல் 60 முறை வரை மெல்ல வேண்டும். உணவை குடிப்பது போல் நன்கு மென்று மசிக்கவும், தண்ணீரை மெல்லுவது போல் நிதானமாக குடிக்க வேண்டும். மாலை 6.45 மணிக்கு மேல் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. அதுவும் நன்கு வேகவைத்த உணவுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாலை 3 மணிக்கு பிறகு எதையும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அதிகாலையில் எழுந்து நீண்ட தூரம் நடக்க வேண்டும். இரவு சீக்கிரமாக தூங்கிவிட வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒன்றரை மணி நேரத்திற்கு டிவி, செல்போன், லேப்டாப் என எதையும் பார்க்க கூடாது. நிறைய திரவங்களை உட்கொள்ள வேண்டும்.
நிறைய பச்சை காய்கறிகளையும் உண்ண வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் உண்ணும் உணவு உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளும். மேலும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இதை தவிர வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை. இவ்வாறு மாதவன் பதிலளித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications