கருத்தரிப்பு பரிசோதனை எத்தனை நாட்களுக்கு பிறகு உறுதி செய்யலாம்?
சென்னை: திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் குறித்த எதிர்பார்ப்பு ஒவ்வொரு மாதமும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய மாதவிடாய் நாட்கள் தள்ளி போகும்போதே, சந்தோஷம் ஆரம்பித்துவிடும். ஆனால் சரியாக, எந்த நாட்களில் அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதை கட்டாயம் எல்லா பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ஆதாவது கடந்த மாதத்தின் மாதவிலக்கு நாட்களை கணக்கில் கொண்டு, சரியான நேரத்தில் உறுதிபடுத்தி கொள்ள முடியும். கருத்தரிப்பு பரிசோதனை (Pregnancy Test) கருத்தரிப்பு பரிசோதனை என்பது 2 விதமான முறையில் செய்வதாகும். பீட்டா HCG ஹார்மோன் (Beta HCG Harmone), இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகும். பெரும்பாலும் கர்ப்ப சிறுநீர் அட்டை சோதனை (Pregnancy Urine Card Test) அதிகம் பின்பற்றும் முறையாகும். இந்த பரிசோதனை எத்தனை நாட்களுக்கு பிறகு செய்யலாம், பின்பு எப்படி உறுதி செய்து கொள்ளலாம் எனபதை பற்றி பார்க்கலாம்.

மாதவிடாய் சுழற்சி: ஒவ்வொரு பெண்களுக்கும் திருமணத்திற்கு முன்பும், உடலுறவுக்கு பின்பு வரக்கூடிய மாதவிடாய் சுழற்சி கட்டாயமாக மாறுபடும். சிலருக்கு திருமணத்திற்கு முன்பு சரியான மாதவிடாய் நாட்கள், மற்றும் சரியான உதிரப்போக்கு இருக்கும், ஆனால் அவை திருமணத்திற்கு பிறகு சற்று மாறுதலாக, மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு திருமணத்திற்கு பிறகு ஒழுங்கற்ற மாதவிலக்கு சீராகிவிடும். இது எல்லாமே தங்கள் உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களாலே நிகழும். மேலும் ஒரு சிலருக்கு வழக்கமான மாதவிடாய் 28 -35 நாட்கள் (Regular Periods) அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods), ஒரே மாதத்தில் 2 முறை வருவது, அல்லது 28 நாட்களுக்கு சுழற்சியில் வருவது, அல்லது 35 - 45 நாட்கள் கழித்து மாதவிடாய் வருவதும், அல்லது நாட்கள் தள்ளி போவதும் போன்ற பல மாற்றங்கள் இருக்கும்.
எத்தனை நாட்கள் கழித்து பரிசோதனை செய்யலாம்: கருத்தரிப்பு பரிசோதனை அவர்களுடைய மாதவிடாய் சுழற்சியை பொருத்தே, கருவுற்றிருப்பதை உறுதி செய்ய முடியும். உதாரணமாக வழக்கமான மாதவிடாய் (Regular Periods) வருபவர்களுக்கு, குறிப்பிட்ட மாதவிடாய் நாட்கள் வராமல் தள்ளி (Missed Periods) போகுமானால் அவசரப்படாமல், மேலும் ஒரு வாரம் ஆதாவது மாதவிடாய் வரவேண்டிய நாட்களிலிருந்து சரியாக 7 நாட்கள் கழித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மற்றபடி ஒழுங்கற்ற மாதவிடாய் (Irregular Periods), ஒரே மாதத்தில் 2 முறை வருவது, அல்லது 28 நாட்களுக்கு சுழற்சியில் வருவது, அல்லது 35 - 45 நாட்கள் கழித்து மாதவிடாய் வருபவர்களுக்கு பீட்டா HCG என்ற ஹார்மோன் (Beta HCG Harmone) சுரப்பு சற்று தாமதமாகவே இருக்குமென்பதால், சரியாக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கழித்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

முக்கிய அறிகுறி பீட்டா HCG ஹார்மோன் சுரப்பு (Beta HCG Harmone): மாதவிடாய் நாட்கள் வராமல் (Missed Periods) தள்ளி போகும்போது, மிக முக்கிய அறிகுறியாக (HCG) என்ற ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சுரக்க ஆரம்பிக்கும், ஒரு வாரத்திற்கு பிறகு நன்கு சுரக்க தொடங்கிவிடும். HCG ஹார்மோன் அதிக அளவில் இருக்கும்போது கர்ப்ப சிறுநீர் அட்டை சோதனை (Pregnancy Urine Card Test) செய்யும்போது கருத்தரிப்பு உறுதியாகிவிடும். அதிகாலையில் செறிவூட்டப்பட்ட சிறுநீர் பரிசோதனை செய்துகொண்டால் துல்லியமான முடிவை பெறமுடியும்.












Click it and Unblock the Notifications