காலை, மாலை கிடையாது.. உடற்பயிற்சி செய்ய பெஸ்ட் டைம் எது என்று தெரியுமா? ஆய்வு சொல்லும் புது தகவல்!

மதிய நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஆயுளை நீட்டிக்கும் என்று தற்போது புது தகவல் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உடற்பயிற்சி செய்ய எது சரியான டைம் என்பது குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு புது ஆய்வு என்ன சொல்கிறது என்றால், மதிய நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஆயுளை நீட்டிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய மாறி வரும் வாழ்க்கை முறையால் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது. நமது முன்னோர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் இருந்தது.

அவர்களின் வாழ்க்கை முறையே அப்படி இருந்ததால் அதற்காக தனி சிரமத்தை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் இயந்திரமயாக்கல் போன்றவற்றால் உடல் உழைப்பு அரிதாகிவிட்டது.

காலை, மாலையில் உடற்பயிற்சி

காலை, மாலையில் உடற்பயிற்சி

அதேபோல், உணவுப் பழக்க வழக்கங்களும் உடல் எடை கூடுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது. எனவே, உடல் எடையை குறைக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தினமும் காலையிலும் மாலையிலும் பலரும் உடற் பயிற்சியில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. இளைம் வயதினர் கூட உடல் எடை அதிகரிப்பு, தொப்பை போடுதல் என உடல் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதால் பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் காலை மற்றும் மாலையில் பலரும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.

உடற்பயிற்சி எப்போது செய்யலாம்

உடற்பயிற்சி எப்போது செய்யலாம்

இருந்தாலும் உடல் பயிற்சி செய்ய எது சரியான டைம் என்பது குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. காலை நேரத்தில் உடல் பயிற்சி செய்யும் பெண்களுக்கு தொப்பை அதிகமாக குறையும் என்றும் ரத்த அழுத்தம் குறையும் என்றும் கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வு பரிந்துரைத்து இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு புது ஆய்வு என்ன சொல்கிறது என்றால், மதிய நேரத்தில் உடல் பயிற்சி செய்வது ஆயுளை நீட்டிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

 92 ஆயிரம் பேரிடம் ஆய்வு

92 ஆயிரம் பேரிடம் ஆய்வு

காலை மற்றும் மாலை வேளைகளில் செய்வதை விட மதிய நேரத்தில் உடற்பயிற்சி செய்வது முன்கூட்டியே மரணம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க உதவும் என்று ஆய்வு சொல்லியிருக்கிறது. ஜர்னல் நேட்சர் இன்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்தில் சுமார் 92 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்தை பொருத்தவரை இந்தியாவை போன்ற மிகுந்த வெப்பம் கொண்ட நாடு இல்லை என்பதையும் இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது

மாரடைப்பு ஏற்படுவது குறைவு

மாரடைப்பு ஏற்படுவது குறைவு

எந்த நேரத்தில் அதிக உடல் பயிற்சி செய்கிறார்கள்.. எப்படி செய்கிறார்கள் என்பதை ஆக்சிலேரே மீட்டர்கள் மூலமாக ஆய்வு செய்து இருக்கிறார்கள். இதில், பல வியக்கும்படியான ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளன. அதாவது, வேகமாக நடப்பது போன்ற உடல் செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடுபவர்களின் ஆயுள் காலம், அரிதாகவே உடல் பயிற்சி செய்பவர்களை விட அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மதிய நேரத்தில் உடல் பயிற்சி செய்தவர்களின் ஆயுள் சற்று அதிகமாகவே இருந்ததையும் ஆய்வில் ஈடுபட்ட குழு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், நண்பகல் நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவது பிற நேரத்துடன் ஒப்பிடும் போது குறைவு எனவும் கூறிய ஆய்வாளர்கள் இந்த இரண்டும் தற்செயலாக ஒத்துப்போவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+