முகமெல்லாம் மினுமினுப்புக்கு "கொலாஜன்".. எலும்பு முதல் வலுவான தோல் வரை காக்கும்.. தக்காளி இருக்குல்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே இளமையாக தோற்றம் தெரியவேண்டுமா? சருமம் சுருக்கமின்றி ஆரோக்கியமான முறையில் பொலிவாக வேண்டுமா? இதோ குட்டி டிப்ஸ்

நம்முடைய சருமத்தை கவசம் போல காக்கக்கூடியது கொலாஜன் என்ற சுரப்பிதான். நம்முடைய உடலில் இருக்கும் ஒரு வகையான புரதத்தின் பெயர்தான் கொலாஜன்..

Amazing Collagen rich foods to enhance skin and Tomato is the Best food that build collagen in our body

எலும்பு மூட்டுகளிலும், ரத்தக்குழாய்களிலும், செரிமான பாதைகளிலும் இந்த கொலாஜன் உற்பத்தியாகிறது.. நாம் முறையான உணவை எடுத்துக்கொள்ளும்போது, இந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.

சுருக்கங்கள்: சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தாமல் காக்ககூடிய புரதம் இதுவாகும்.. எனவே, முக சுருக்கத்தை சரி செய்ய அடிப்படையாக இருப்பதும் இந்த கொலாஜன்தான். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதில் கொலாஜன் பங்கு அபரிமிதமானது.. சருமம் ஈரப்பதத்துடன் மிளிர காரணமாக இருப்பதும் இந்த கொலாஜன்தான்.

இந்த கொலாஜன் உற்பத்தி உடலில் குறையும்போது, சுருக்கங்கள் உட்பட பல தொந்தரவுகள் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.. எனவே, இந்த கொலாஜனை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. இதற்காக, பிரத்யேகமான மாத்திரை மருந்துகள், மாய்சரைஸர்கள், லோஷன்களில் கொலாஜன் கிடைக்கிறது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

சத்தான உணவு: அதேசமயம், ஆரோக்கியமான முறையில், சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமே கொலாஜன் உற்பத்தியை நம்மால் அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அரிசி, மைதா, கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரை இதையெல்லாம் முதலில் நிறுத்த வேண்டும்.. ஏனென்றால், இதை சாப்பிடும்போது, கொலாஜன் உற்பத்தி அளவு நமக்குள் குறைந்துவிடுமாம்..

இவைகளுக்கு பதிலாக, காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், பூண்டு, ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்றவைகளில் கொலாஜன் நிறைந்து கிடைக்கிறது.. எல்லாவற்றையும்விட, சோயாவில் எக்கச்சக்க கொலாஜன் உள்ளது. சருமத்தின் வயதாவதற்கு வழிவகுக்கும் என்சைம்களை சோயா வெகுவாக தடுக்கிறது.

நெகிழ்ச்சித்தன்மை: சருமத்தில் கொலாஜனை அதிகரிப்பதில் தக்காளியும் உதவுகிறது.. சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, அதை உறுதியாக்குகின்றன தக்காளிகள்.. கொட்டைகள் என்று சொல்லக்கூடிய தானியவகை பருப்புகள் துத்தநாகத்தின் சிறந்த ஆதாரங்களாகும்.. இது உடலில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே, ஆளி விதைகள், வால்நட்ஸ் மற்றும் பாதாம் போன்றவற்றை தவறவிடக்கூடாது.

வெண்ணெய் பழங்களிலும், சிறந்த கொலாஜன் உற்பத்தி கிடைக்கும்... இது தோலின் கட்டமைப்பை உறுதியாக வைத்திருக்க உவுகிறது.. கேரன், பீன்ஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற வைட்டமின் A நிறைந்த உணவுகளில், கொலாஜனை ஒருங்கிணைக்க உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன.

முட்டை வெள்ளைக்கரு: அதேபோல, அசைவ உணவுகளில், முட்டையின் வெள்ளைக்கருவில் கொலாஜன் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கரு, கொலாஜன் உற்பத்திக்கு அத்தியாவசியமான அமினோ அமிலமான புரோலைனை உடலுக்கு வழங்குகிறது. அதேபோல, மீன்களை சாப்பிடும்போதும் இந்த கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். அதைவிட முக்கியமாக ஆட்டுக்கால் சூப்பில் நிறைய கொலாஜன் இருக்கிறது..
மட்டனில், மார்கண்டம் என்று சொல்லக்கூடிய ஆட்டின் விலா எலும்பு பகுதியிலும் கொலாஜன் ஒளிந்திருக்கிறது. எனவே, இந்த எலும்புகளை நன்றாக வேக வைக்கும்போது, எலும்பு மஜ்ஜையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளிப்பட்டு அதுதான் நமக்கு முழுமையான சத்துக்களாக கிடைக்கின்றன..

தலைமுடி: கொலாஜன் தவிர, குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் போன்றவை நிறைந்துள்ளதால், மூட்டுகளுக்கும், எலும்புகளுக்கும் சக்தி கிடைக்கிறது. மட்டன் எலும்புகளை சூப் வைத்து குடிக்கும்போது, நம் சருமத்துக்கும், தலைமுடி, தோல், நகங்களுக்கும் வலு தருகிறது.. தலைமுடிகளும் பலம் பெறுகின்றன.. சரும சுருக்கங்களும் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து விலகுகின்றன..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+