முருங்கைக்கீரை.. முன்னூறு நோயும் ஓடிரும்.. யார் யாரெல்லாம் முருங்கையிலையை சாப்பிடக்கூடாது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன? முருங்கைக்கீரையை எவ்வளவு சாப்பிடலாம்? இதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

மற்ற கீரை வகைகளைவிட அதிக முக்கியத்துவத்தை பெறுவது எப்போதுமே முருங்கைக்கீரை மட்டும்தான்.. காரணம், மற்ற கீரைகளிலுள்ள இரும்புச்சத்தினைவிட, 75 சதவீதம் அதிகமாக இரும்புச்சத்துக்கள் முருங்கை கீரையில் இருக்கிறது..

Health Health tips Drumstick leaves murungai keerai

ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் C உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் இந்த கீரையில் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு வைட்டமின் A முருங்கைக்கீரையில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் இதில், உள்ளது. முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் அடங்கும்.

இந்த தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, வயிற்றுப்புண்கள் ஆறிவிடும். சிறுநீரக கோளாறுகள் ஏற்படாதவாறு உடல் கழிவுகளை வெளியேற்ற செய்கிறது.

தோல் வியாதிகள்: தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் விலகும்.. உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலையும் முருங்கைக்கீரை நீக்குகிறது.. இந்த இலையில், அதிக அளவில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் அதிக உடல் எடை, சர்க்கரை நோய், ரத்த சோகை, இதயநோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு போன்றவற்றை குணப்படுத்தும்.

புற்றுநோய் தடுப்புக்கு உதவக்கூடியது இந்த முருங்கைக்கீரை.. இதிலுள்ள பயோஆக்டிவ் கலவையானது, புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடியது என்கிறார்கள்.. ஆனால், மனிதர்கள் மீதான ஆய்வு இன்னும் நடத்தப்படவில்லை.

ஆண்மை கோளாறுகள்: ஆண்மை கோளாறுகளை போக்குவதில் முருங்கை முக்கிய பங்காற்றுகிறது.. ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரி செய்ய உதவுவதாக விலங்குகளின் மீதான ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைவான விந்தணு உற்பத்தி, விந்தணு இயக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைக்கீரை.. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

தலைமுடிக்கு சிறந்த மருந்து முருங்கை.. இதை உணவில் உட்கொள்ளும்போது, தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும்... முருங்கையிலையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் வலுப்பெறும், ஈறுகள் சம்பந்தமான பிரச்சனையும் தீரும்.. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பாஸ்பரஸ் இந்த முருங்கையில் நிறைந்துள்ளது..

எதிர்வினைகள்: இத்தனை நன்மைகள் இருந்தாலும் முருங்கைக்கீரையை அளவுடன் எடுத்து கொள்ளவேண்டும். ஒரு கப் அளவுக்கு மேல் எடுத்து கொள்ள கூடாது.. அதேபோல ஒருசிலருக்கு இது எதிர்வினையையும் உண்டுபண்ணிவிடும்.. முருங்கை கீரை அதிகம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்...

குறிப்பாக பாலூட்டும் பெண்கள் இந்த முருங்கைக்கீரையை தவிர்க்கக்கூடாது என்றாலும், இதன் வேர்கள், பட்டைகள் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், அதிலுள்ள நச்சுப்ப்பொருள்களை தாய்ப்பால் வழியாக குழந்தைக்கும் சென்றுவிடும்.. எனவே, முருங்கை வேர்கள் உள்ளிட்டவற்றை தாய்ப்பால் காலங்களிலும் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்கிறர்கள். அதேபோல கர்ப்பிணிப் பெண்கள் உணவில் முருங்கை கீரை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

சர்க்கரை நோயாளி: அதேபோல, முருங்கையிலுள்ள ஆல்கலாய்டுகள், ரத்த அழுத்தத்தை குறைப்பதாக கூறுகிறார்கள்.. அதேபோல, இதயத்துடிப்பையும் குறைக்க செய்துவிடும் என்பதால், கீரைகளையும சரி, அதன் விதைகளையும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதேபோல சர்க்கரை நோயாளிகளும், முருங்கையை அதிகம் சாப்பிடும்போது, நீரிழிவு மருந்தின் வீரியத்தை குறைத்துவிடக்கூடும்.

ரத்த மெலிதலுக்கு சிகிச்சை எடுப்பவர்கள் இந்த கீரை, விதைகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல, அதிகமான முருங்கைக்கீரையை சாப்பிடும்போது, கல்லீரல்,சிறுநீரகத்துக்கு பாதிப்பை தந்துவிடும் என்று விலங்குகள் குறித்த ஆய்வுகள் கூறுகின்றன.

விதைகள்: எப்படி பார்த்தாலும், கீரையைவிட, விதைகள், பட்டைகளே அதிக உடல்நல பாதிப்பை தந்துவிடக்கூடியதாக உள்ளது. அதிலும், முருங்கை விதை சாறுகள் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நச்சுத்தன்மைக்கு வழிவகுத்துவிடும். இந்த முருங்கை கீரையை இரவில் சாப்பிடக் கூடாது. மொத்தத்தில் முருங்கைக்கீரையை அளவுடன் உட்கொள்வதே ஆரோக்கியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+